பக்கம்:பல்சுவை விருந்து.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம்

தடித்தஓர் மகனை தந்தைஈண்டு அடித்தால் தாயுடன் அணைப்பள்; தாய் அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன், இங் கெனக்குப்

பேசிய தந்தையும் தாயும் பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்

அம்மைஅப் பாஇனி ஆற்றேன்'

- இராமலிங்க வள்ளல் 'பல்சுவை விருந்து என்ற இந்நூல் பல்வேறு சந்தர்ப் பங்களில் ஆழ்ந்த சிந்தனையுடன் எழுதப் பெற்ற பதின்மூன்று கட்டுரைகளின் தொகுப்பாகும் ஒன்றேகுலம் ஒருவனே தேவன்' என்பது முதல் கட்டுரை வைணவசிகரப் பேரொளி' என்பது இறுதிக் கட்டுரை எழுதப் பெற்ற சந்தர்ப்பங்கள் அந்தந்த கட்டுரையின் கீழ்க் குறிக்கப் பெற்றுள்ளன.

இலக்கிய ஆய்வு, அறிவியல், வள்ளுவர் பெருமான் கருத்துக் கருவூலம், சுவை பற்றிய கருத்து, சீர்திருத்தம், புதுக்கவிதை, பெரியார்கள் பற்றிய நினைவுக் குறிப்புகள் ஆகிய பல்வேறு பொருள்களைப் பற்றிய கட்டுரைகள் கொண்டு இலங்குவதால் பல்சுவை விருந்து என்ற திருநாமம் பெற்று வாசகர்களிடையே உலா வருகின்றது. கட்டுரைகள் தனித்தனிப் பொருளைத் தாங்கி முடிவு பெறுவதால் படிப்போர் எதை வேண்டுமானாலும் எடுத்துப் படித்து ஒவ்வொரு கட்டுரையைப் படித்தலால் முழு மனநிறைவு பெறலாம். வாயினால் உண்ணப் பெறும் விருந்து புலன்கள்மூலம் மனத்திற்கு எட்டி மகிழ்ச்சி தரும்; மனத்தினால் நேரே உண்ணப்படும் இக்கட்டுரை விருந்து நேரே மனத்திற்கு மகிழ்வூட்டும். முன்னைய விருந்து தெவிட்டும்: பின்னைய விருந்து தெவிட்டாது.