பக்கம்:பல்சுவை விருந்து.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ičğ பல்சுவை விருந்து

துறையில் பொது இயக்குநராக இருந்த சுந்தர வடிவேலுக்கு அதிக சுதந்திரம் இருந்தது. காமராசரும் திரு. சுப்பிரமணியமும் இயல்பாகவே ஏழை பங்காளர்கள். இதனால் சுந்தர வடிவேலு வின் செயற்பாடு தடையின்றி நடைபெற்றது. மாறாக ஊக்கு விப்பும் ஆதரவும் கிடைத்தன. சுந்தர வடிவேலுவின் மதிய உணவு, சீருடைத் திட்டங்களை நாடாளுமன்றமும் பாராட்டிப் பேசியது. அதனை நினைவு கூரும் வகையில், நற்றவ வடிவாம் வள்ளுவன் கம்பன்

நல்லிளங் கோவுயர் கபிலன் கொற்றமார் கீரன் பாரதி தங்கிக்

குலவிய செந்தமிழ்த் தாயின் பற்றுறு வயிற்றில் திருவொடு தங்கிப்

பண்பொடு தோன்றிய செல்வர்; கற்றவர்க் கினியர், சுந்தர வடிவேல்

கண்ணியர்க் குரியதிந் நூலே. என்ற பாடல் மூலம் இந்நூலை அப்பெருமகனுக்கு அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். இதுவும் கழக வெளியீடாக வந்து பல பதிப்புகளைக் கண்டு புகழ் பெற்றிலங்குகின்றது.

காமராசர் நிர்வாகம் சிறப்புற்றுத் திகழ்ந்த காலத்தில் அவர் கோப்புகளை எவ்வாறு முடிக்கிறார் என்பதைப் பார்க்க ஆவல் இருந்தது. எனக்கும் அவருக்கும் வேண்டிய பேருந்து முதலாளி R. கிருஷ்ணசாமி ரெட்டியார் மூலம் ஒர் அரை நாள் (மூன்று மணி நேரம்) நேரில் கவனிக்க அநுமதி பெற்றேன். கோப்பு களைக் கையாளும் முறையே அற்புதம், தலைமைச் செய லாளரை வைத்துக் கொண்டு கோப்புகளைக் கையாளுவார்.

ஒரு கோப்பை எடுக்கச் சொல்லி 'இது பேப்பர்கள் அடங்கிய கட்டு அல்ல, இஃது ஆள் மனு போட்டாரே, அந்த ஆள். அவர் என்ன கேட்கிறார்?'