பக்கம்:பல்சுவை விருந்து.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV i

வியப்படையச் செய்து விட்டது. வயது முதிர்ந்து தளர்ச்சியுற்ற அடியேனைப் பல இடங்கட்கும் இட்டுச் சென்ற உதவி என் ஆயுள் உள்ளவரை மறக்க ஒண்ணாதது. இத்தகைய திறமை மிக்க ஒல்லும் வகையெல்லாம் உவப்புடன் பணியாற்றி வருபவரும் அறிஞர் உலகின் பாராட்டுதலைப் பெற்றவரும் இறையன்பும் பண்பாடும் மிக்க இந்தப் பெருமகனாரின் அணிந்துரை பெற்றது இந்த நூலின் பேறு; அடியேனின் பேறுங்கூட அணிந்துரை வழங்கிய பெருமகனாருக்கு என் உளங்கனிந்த நன்றி என்றும் உரியது.

டாக்டர் கி. வேங்கட சுப்பிரமணியன் அவர்களை அறியாத தமிழர்களே இலர். பல்வேறுவகைப் பதவிகளில் இருந்து செயலாற்றும்போது விருப்பு வெறுப்பற்று. சாதி சமய வேறுபாடுகளைக் கருதாது பணியே பரமன் பணித்த தெய்வப் பணி என்று கருதி ஆற்றிவந்ததைத் தமிழகம் நன்கு அறியும்; ஏன்? பாரத பூமியே தெளிவாக அறியும். மாவட்டக் கல்வி அதிகாரியாகப் பதவியேற்று (1950களில்) படிப்படியாக பதவிகளில் உயர்ந்து கல்வித்துறை இயக்குநராகப் பணியாற்றிய நாளிலிருந்து அடியேன் நன்கு அறிவேன். காமராசர் ஆட்சியில் தாமரைச் செல்வர் நெது. சுந்தரவடிவேலு அவர்களுடன் இணைந்து பணியாற்றியபோது உயர்நிலைப் பள்ளி வரை இலவசக் கல்வி, சீருடை - மதிய உணவுத் திட்டங்களைச் செயற் படுத்தி ஆற்றிய அற்புதப் பணியை நாடாளுமன்றமே போற்றிப் புகழாரம் சூட்டியதை நாடே நன்கு அறியும். அக்காலத்தில் ஒரு சிலவற்றில் அடியேனையும் இணைத்துக் கொண்டார். அடுத்து பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பதவியேற்றுப் பணியாற்றிய போது அதனை நாடே போற்றும் வகையில் பணியாற்றிப் படிப்படியாக அதனைப் பன்முக வளர்ச்சியடையச் செய்து இந்திய நாட்டின் கவனத்தை ஈர்க்கச் செய்ததை நாம் அறிவோம். இந்தப் பல்கலைக் கழகம் தொடங்கிய நாள்தொட்டு அடியேனைப் பல்வேறு குழுக்களில் பொறுப்புகளைத் தந்தமையால் இவர்தம் செயலாற்றும் திறனை நேரில் கண்டு மகிழ அடியேனுக்கு வாய்ப்பு இருந்தது. வேங்கட மேய விளக்கின் திருவருள் என்று ப.க - 2