பக்கம்:பல்சுவை விருந்து.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

9

2

13. வைணவ சிகரப் பேரொளி'

இளையாழ்வார் என்று வழங்கப்பெறும் இராமாநுசர் தொண்டை நாட்டைச் சார்ந்த பூரீபெரும்புதூரில் பிறந்தார். காஞ்சியில் கல்வி கற்றார். வரதராசருக்குத் தீர்த்த கைங்கரியம் புரிந்தார். இறையருளால் ஆளவந்தார்க்கு அடுத்து வைணவ சமயத்தைப் பரப்பும் பெரும்பணியில் ஆசாரிய சிகாமணியாகத் திகழ்ந்து 120 ஆண்டுகள் வாழ்ந்தார். இப்பணி திருவரங்கத்தில் நடைபெற்றது. சைவ சமயத்தைச் சார்ந்த சோழ மன்னனால் உயிருக்கே ஊறு ஏற்படும் ஆபத்தைக் கருதி இவருடைய சீடர்கள் வெள்ளையாடை புனைவித்துத் தப்ப வைத்தனர். ஐந்து சீடர்களுடன் மேற்கு நோக்கி நடந்து நீலகிரி வழியாக மைசூர்ப் பகுதியைச் சார்ந்த மேல்கோட்டையில் தங்கி இறைபணியைத் தொடர்ந்தார். இவருடைய வாழ்வையும் பணியையும் விரித்து எழுதினால் ஓர் இதிகாசமாக வளரும்.

மேல்கோட்டையில் பணி; மேல்கோட்டை திருநாராயண புரம் என்ற பெயராலும் வழங்குகிறது. தாம் துளசி வனத்தில் கண்டெடுத்த விக்கிரகத்தைத் திருநாராயணபுரத்தில் பிரதிட்டை செய்து ஒரு திருக்கோவில் எழுப்புவித்தார். விட்டல் தேவராயன் என்ற சமண அரசன் வைணவ சமயத்தைத் தழுவினான். இராமாநுசர் அவனுக்கு விஷ்ணுவர்த்தன் ராயன் என்ற பாகவதப் புனை பெயரான தாஸ்ய நாமத்தைச் சூட்டினார். அவனுடைய மகளுக்கும் பிடித்திருந்த பேயும் விலகியது. உடையவர் அருளால் திருநாராயணபுரத்துத் திருக்கோவில் எழும்புவதற்கு இவ்வரசன் புரிந்த உதவி மிகப் பெரிது. திருநாராயணபுரத்துப் பெருமானை 'திருநாராயணன்' என்ற திருப்பெயரால் வழிபட்டனர். திருக்கோயிலில் பல விழாக்களுக்கு

  • சர்வமங்கள நகர் - நங்கை நல்லூர் (சென்னை - 51) பூரீ தர்மலிங்கேசுவரர் ஆலயம் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக சிறப்பு மலரில் (14-9-1992) வெளிவந்தது.