பக்கம்:பல்சுவை விருந்து.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

நடைபெற்ற வண்ணம் உள்ளன. சமயச் சார்ப்பில்லாப் போர்வை யைப் போர்த்திக்கொண்டு அரசும் இதில் தலையிடாமல் கையைப் பிசைந்து கொண்டும் ஊமைபோல் பார்த்துக் கொண்டும் வாளா இருக்கின்றது.

நம் நாட்டுத் தருக்கப்பூசல்களையும் பிறவற்றையும் கண்ட தாயுமான அடிகள்,

கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்,

கற்றும்அறி வில்லாத என் கன்மத்தை என் சொல்கேன்? மதியை என் சொல்லுகேன்?

கைவல்ய ஞான நீதி நல்லோர் உரைக்கிலோ கர்மமுக் கியமென்று

நாட்டுவேன் கர்மம் ஒருவன் நாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று

நவிலுவேன் வடமொழியிலே வல்லான் ஒருத்தன்வர வும், திரா விடத்திலே

வந்ததா விவகரிப் பேன வல்லதமிழ் அறிஞர்வரின் அய்யனே வடமொழியின்

வசனங்கள் சிறிது புகல்வேன் வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகைவந்த

வித்தையென் முத்திதருமோ? வேதாந்த சித்தாந்த சமரசநன் நிலைபெற்ற

வித்தகர்ச் சித்தர் கணமே” என்று தெளிவாக எடுத்துரைப்பது நன்கு கருதத்தக்கது.

சாதி சமயம் எனும் அளறிலும் சாத்திரச் சேற்றிலும் தான் சிக்கிக் கொள்ளாதிருக்கும் நிலையைத் தான் அறியவில்லையே என்று அங்கலாய்க்கின்றார் வடலூர் வள்ளல்,

6. தா.பா. சித்தர்கணம் - 10