பக்கம்:பல்சுவை விருந்து.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் வள்ளுவம் 25

என்றபடி ஆய் விடுகிறான். அவன் கோபமும் தணிந்து விடுகிறது. இலக்குவனுடைய கோபம் தணிந்தமை கண்டு அநுமான் மெதுவாக அவன் அருகில் வருகிறான். இலக்குவன் அவனைநோக்கி,

அந்தமில் கேள்வி நீயும்

அயர்த்தனை யாகும் அன்றே முந்தின செய்கை?? என்று கேட்கிறான். அதனைக் கேட்ட சொல்லின் செல்வனான அநுமான், செய்ந்நன்றி கொன்றவர்க்கு அப்பாவத்தை ஒழிக்கும் வழி கூட இருக்கிறதா? என்று கேட்கிறான். தாய், தந்தை, குரு. அந்தண்ர், பசு, பெண். இவர்களைக் கொன்றவர்கள் யாவருமே கழுவாய் தேடிக் கொள்ளலாம். செய்த உபகாரத்தை மறந்தவர் கட்கு உய்யும் வழியே இல்லை என்று உணர்த்துகிறான். அநுமான் வாய்மொழியாகக் கம்பன்,

சிதை(வு)அகல் காதல் தாயைத்

தந்தையைக் குருவைத் தெய்வப் பதவிஅந் தணரை ஆவைப்

பாலரைப் பாவை மாரை வதைபுரி குநர்க்கும் உண்டாம்

மாற்றலாம் ஆற்றல்; மாயா உதவிகொன் றார்க்(கு)ஒன்(று) ஏனும்

ஒழிக்கலாம் உபாயம் உண்டோ?" என்று கூறுகிறான். 'எந்நன்றி கொன்றார்க்கும்' என்ற திருக்குறளடிக்கு சிதைவு அகல் காதல் தாய், முதலியவர்களைக் கொல்லும் பாவங்களை எடுத்துக்காட்டுகளாகத் தருகிறான் என்றுதானே சொல்ல வேண்டும்?

9. டிெ - டிெ - டிெ - 61 10 ു - കെ ു - 62