பக்கம்:பல்சுவை விருந்து.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின் பாடல்களில் படிமங்கள் 35

இக்கவிதையில் காலை இளம்பரிதி, கடற்பரப்பு, ஒளிப் புனல், சோலை, மலர், மேற்றிசையில் இளகுகின்ற மாணிக்கச் சுடர், ஆலஞ்சாலை, கிளியின் கூட்டம் இவற்றில் உள்ள சொல் அல்லது தொடர்களால் உணர்த்தப் பெறும் வண்ண வடிவக் கட்புலப் படிமங்களைக் கண்டு மகிழ்க.

இரவு வரும் காட்சி இனிதாகக் காட்டப் பெறும் பாடற்பகுதி இது:

மேற்றிசைக் கதிர்ப்ப ழத்தை

விருந்துண்டு நீல ஆடை மாற்றுடை யாய்உ டுத்து

மரகத அணிகள் பூண்டு கோற்கிளை ஒடுங்கும் புட்கள்

கோட்டிடும் இறகின் சந்தக் காற்சிலம் பசையக் காதற்

கரும்பான இரவு தன்னைத் திருவிளக் கேற்றி வந்து

தெருவினில் வரவேற் கின்றாள்." மேற்றிசைக் கதிர் பழம், கரும்பான இரவு, திருவிளக்கு இவற்றில் கட்புலப் படிமங்களைக் கண்டு களிக்கலாம்.

சின்னஞ் சிறுகிளியை - அரும் பெரும் தவத்தால் பெற்ற பெண் குழவியை - வேடப்பன் காண்கின்றான்.

இளகிய பொன்ச ருக்கின்

சிற்றுடல், இருநீ லக்கண் ஒளிபடும் பவளச் செவ்வாய்

ஒருபிடிக் கரும்பின் கைகால் அளிதமிழ் உயிர்பெற் றங்கே

அழகொடும் அசையும் பச்சைக் கிளியினைக் காணப் பெற்றான்."

8. குடும்ப விளக்கு - ஒரு நாள் நிகழ்ச்சி. 9. டிெ - மக்கட்பேறு.