பக்கம்:பல்சுவை விருந்து.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு பெரு மூளையில் பதிவாகியிருக்கும் அநுபவம் அச்சு வடிவிலுள்ள கவிதைகளைப் ப்டிக்கும்போது நினைவாற் றலின் காரணமாக தூண்டல்களாக (ideational level) மாறு கின்றன. அவை மூளையிலுள்ள பூத்தண்டு, மேற் பூத்தண்டு என்ற பகுதிகளின் மூலமாகப் புலன்களை அடையும்போது மூளையில் அற்புதமாக அமைந்திருக்கும் நரம்பு அமைப்பு களைத் துண்ட, அந்நரம்புகளின் இயக்கத்தால் மாங்காய்ச் சுரப்பிகள் (Adrenal glands) போன்ற நாளமிலாச் சுரப்பிகளில் சாறுகளை ஊறச் செய்து குருதியோட்டத்தை மிகுவிக்கின்றது. உடலும் கிளர்ச்சியடைகின்றது. அப்போது கவிதைகளில் வரும் படிமங்களைப் புலன்கள் மீண்டும் மனத்தில் தோன்றச் செய்கின்றன. மனம் அக்காட்சிகளை அநுபவித்து மகிழ்கின்றது.

இத்தகைய முருகுணர்ச்சியை தம் முருகியல் நோக்கால் தம்முடைய கவிதைகளில் ஏற்றி வைக்கின்றனர் கவிஞர்கள். உலக இயல்பிற்குப் படம் போலிருக்கும் அவர்களுடைய கவிதைகளை நாம் பயிலுங்கால் அதே நோக்கை நாம் பயிற்சி யால் ஒரளவு பெற்று விடுகின்றோம். கவிஞர்கள் உலகப் பொருள்களை அநுபவித்த உணர்ச்சி சுவை வடிவமாக அவர்தம் கவிதைகளில் தேக்கி வைக்கப் பெற்றுள்ளது. அக்கவிதைகளை நாம் பயிலுங்கால் அவற்றிலுள்ள சுவைகளை நம் மனம் அநுபவித்து மகிழ்கின்றது. பாவேந்தரின் பாடல்களைப் பயின்று அநுபவிப்பவர்கள் அவருடைய முருகியல் நோக்கை மானசீக மாகக் கண்டு மகிழலாம். நம்மிடமும் அந்நோக்கு எழுவதையும் உணர்ந்து மகிழலாம். பாடல்களும் மம்மர் அறுக்கும் மருந்தாக' நமக்குக் களிப்பூட்டுவதையும் உணரலாம்.