பக்கம்:பல்சுவை விருந்து.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பல்சுவை விருந்து

நிலை இராக்கெட்டு. எல்லாவற்றிற்கும் மேல் உச்சியிலுள்ளது மூன்றாவது நிலை இராக்கெட்டு. இதில்தான் விண்வெளிப் பயணத்தில் பயன்படுத்தப்படும் விண்கலம் அல்லது துணைக் கோள் பொருத்தப் பெற்றிருக்கும். இந்த அமைப்பின் நுனியில் காற்றைக் கிழித்துச் செல்லக் கூடிய கூம்பிய வடிவிலுள்ள மூக்குப் பகுதி ஒன்றிருக்கும். இராக்கெட்டு அமைப்பில் பொறிகள் யாவும் செம்மையாக இயங்குகின்றனவா என்று பொறிஞர்கள் சோதித்துப் பார்த்த பிறகு, எல்லாத் துறை அறிஞர்களும் ஆமோதித்ததும், இராக்கெட்டின் அமைப்பு இயக்கப் பெறும் நிலையில் உள்ளது என்பது உறுதி செய்யப் பெறுகின்றது.

இயக்கப் பெறும் தத்துவம் ஆய்வுக்கு அனுப்பப் பெறும் விண்கலம் அல்லது ஆட்களை ஏற்றிச் செல்லும் விண்கலம் இவற்றின் எடை எவ்வளவாக இருந்த போதிலும் அஃது இயக்கப்பெற வேண்டிய வேகமும் அதனைச் சுற்று வழியில் இயக்கும் முறையும் ஒன்றேயாகும். விண்கலத்தை ஏற்றிச் செல்லும் இராக்கெட்டு மணிக்கு 28,800 கி.மீ. வேகத்தை அடைந்த பின்னர்தான் அதனைச் சுற்று வழியில் இயக்கி விட வேண்டும். அப்போதுதான் அது வட்ட வழியில் சுற்றி வரும், அதன் வேகம் அதிகரிக்க வேண்டுமாயின் அதன் பொருண்மை விகிதம் (Mass ratio) அதிகரித்தல் வேண்டும். இராக்கெட்டு பூமியை விட்டு மேலே கிளம்புவதற்கு முன் எரிபொருளுடன் கூடிய அதன் பொருண்மைக்கும் எரிபொருள் தீர்ந்த பிறகு உள்ள எஞ்சிய பொருண்மைக்கும் உள்ள விகிதமே அதன் பொருண்மை விகிதமாகும். சாதாரணமாக இராக்கெட்டிலுள்ள எரி பொருண்மை மட்டிலும் 75% இருக்கும். அதன் மேலுறை, உள்ளிருக்கும் பொறிகள், இராக்கெட்டின் உச்சியிலுள்ள விண்கலம் ஆகியவை யாவும் சேர்ந்து 25% இருக்கும். ஆகவே, எரிபொருள் கலவை தீர்ந்தபின் எஞ்சியிருக்கும் பொருண்மை 25% தான் இருக்கும். அந்த அமைப்பினைக் கொண்ட இராக்கெட்டின் பொருண்மை விகிதம் 75 + 25l25 = 4 ஆகும். பொருண்மை விகிதத்தின் அதிகரிப்பிற்கேற்ப இராக்கெட்டின்