பக்கம்:பல்சுவை விருந்து.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளிப் பயணம் 6 :

செல்லும் விண்வெளிக் கூண்டினுள் அமைதல் வேண்டும். கூண்டினுள் வளி மண்டல அழுத்தத்தில் காற்று அடைக்கப் பெற் றிருக்கும். வெப்ப நிலையும் 65% இருக்குமாறு செய்வதற்கேற்ற குளிர் சாதன அமைப்பு பொருத்தப் பெற்றிருக்கும். ஈயத்தகடு கதிர் வீச்சினைத் தடுக்க வல்லதாகையால், கூண்டின் சுவரில் ஈயத் தகடுகள் பல அடுக்குகளில் பதிக்கப் பெற்றிருக்கும். விபத்துக்களின் விளைவுகளைக் குறைப்பதற்காகப் பல அறைகள் கூண்டினுள் அமைக்கப் பெற்றிருக்கும். எனினும் ஏதாவது ஒர் அறையில் காற்று வெளியேற நேரிட்டால் அழுத்தக் குறைவு ஏற்பட்டு அங்குள்ளவர் மூச்சுத் திணறலுக்கு உட்பட்டும் வெற்றிடச் சூழ்நிலைகளுக்குள்ள விளைவுகள் ஏற்பட்டும் மரணம் அடைய் நேரிடும். இதனைத் தவிர்க்க ஏற்பாடுகள் செய்யப் பெறுதல் வேண்டும்.

விண்கற்கள்: விண்வெளியில் கணம்தோறும் இலட்சக் கணக்கான விண்கற்கள் அதி வேகமாகப் பூமியை நோக்கி வீழ்ந்து கொண்டுள்ளன. கோள்களைப் போலவே கதிரவனைக் கோடிக்கணக்கான சிறுசிறு உருண்டைகளும் துணுக்குகளும் சுற்றி வருகின்றன. அவற்றுள் சில சில சமயம் விடுதலை யடைந்து பூமியின்மீது பாய்கின்றன. சில சமயம் பூமியும் அவற்றினிடையே பாய்ந்து செல்ல நேரிடுகின்றது. செயற்கைத் துணைக் கோள் விண்கற்களால் தாக்கப் பெற்றுத் துளைக்கப் பெறின் கூண்டினுள் இருக்கும் காற்று ஒரு சில வினாடிகளில் வெளியேறி விடும். கூண்டினுள்ளிருக்கும் விண்வெளி விமானி யும் மூர்ச்சையாகி விழுந்து விடுவான். இங்ங்னம் ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக பல்வேறு பயிற்சி முறைகள் கையாளப் பெறுகின்றன. கூண்டின் சுவரைப் பல் அடுக்குத் தகடுகளால் அமைப்பது ஒருமுறை. சாதாரணமாக விண்கற்கள் மிகச் சிறியவையாதலின் அவை இந்த அடுக்கு அமைப்பில் பட்டுத் தெறித்தும் போய் விடுகின்றன. தகடுகளைச் சில துளைக்க நேரிட்டாலும் அவை மற்றைத் தகடுகளிடையே சிக்கிக் கொண்டு விடும்.

ப.க - 6