பக்கம்:பல்சுவை விருந்து.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பல்சுவை விருந்து

அண்டக் கதிர்கள்: இவை இன்னும் விளங்காப் புதிர்க ளாகவே உள்ளது. இவற்றுள் சிதருண்டு அயனிகளாகும் (ions) பகுதியே அதிகக் கேடு பயக்கக் கூடியது. இக்கதிர்கள் சிறிது அளவு விண்வெளி விமானியையோ அவர்கள் செல்லும் கூண்டினையோ தாக்கினால் அதனால் யாதொரு கேடும் விளையாது என்கின்றனர் அறிவியலறிஞர்கள்.

வேறு நெருக்கடிகள்: இவற்றுள் முக்கியமாக (1) மின்சார அமைப்பில் நேரிடும் கோளாறுகள் (2) தீவிபத்து (3) திடீரென்று அறைகளில் அழுத்தம் குறைதல் (4) விசைச் கருவியிலும் சுக்கானிலும் (Huil) ஏற்படும் பொறியடைப்புக் கோளாறுகள் ஆகியவை இவற்றைச் சமாளிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப் பெற்று வருகின்றன. இதுகாறும் சென்ற விண்வெளி வீரர்கட்கு இத்தகைய இடர்ப்பாடுகள் ஏற்படவில்லை.

விண்வெளி அநுபவங்கள்: விண்வெளிப் பயணத்தில் ஊர்தி பழுதடைந்தால் சீர்படுத்திக் கொள்ளலாம். இதில் பயணம் செய்யும் பயண நாயகன் மனிதன். இவன் சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னைச் சமாளித்துக் கொள்வதற்கேற்ற ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.

மிகுதியான எடை பூமியிலிருந்து உயரக் கிளம்புகையில் ஆற்றல் வாய்ந்த நேர்வேக வளர்ச்சியின் காரணமாகப் பயணி களின் எடை பன்மடங்கு அதிகரித்து விட்டது போன்ற உணர்ச்சி ஏற்படும். துரிதமான விசை மாற்றம் ஏற்படுவதால் பொருளின் எடை 6 மடங்கிற்கு மேல் உயர்ந்து விடுகின்றது; விண்கலத்தின் உள்ளிருக்கும் மனிதனின் நிலையும் இதுவே. 80 கி. கிராம் எடையுள்ள மனிதன் 480 கி.கிராம் எடையைத் தன் மீது வைத்தது போன்ற உணர்ச்சியை அடைவான்; இதனால் பழுவடைந்த குருதி உடலின்கீழ் பகுதிகட்கு விரைந்து செல்லு கின்றது. மேற்பகுதியின் குருதியோட்டம் பாதிக்கப் பெறு கின்றது. மயக்கமும் ஏற்படுகின்றது. பூமியில் இதைச் சமாளிக்கப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. மைய விலகு விசைக் கருவியைக் (Centrifuge) கொண்டு பயிற்சி அளிக்கின்றனர்.