பக்கம்:பல்சுவை விருந்து.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் நகைச்சுவை 69

பிற பாவங்களையும் கேடுறாமல் ரஸ்மாகிச் சமையும் அளவும் நிலை நிற்கும் பாவம் ஸ்தாயி பாவம் (நிலையான பாவம்) எனப்படும். இது காதல், சோகம் முதலாக ஒன்பது வகைப்படும். அதனைப் பின்னர் விளக்குவேன். உலகியலில் உண்டாகும் காதல் முதலியவற்றிற்குக் காரணமாயும், காரியமாயும், துணைக் காரணமாயும் இருப்பவை கவிஞனின் வாக்கிலும் நடிகனின் அபிநயத்திலும் அறிவிக்கப்படும்போது முறையே விபாவம் (நன்கு தோன்றச் செய்வது) என்றும், அநுபாவம் (விபாவத் துடன் இயைந்துள்ளது) என்றும், சஞ்சாரி பாவம் (துணை செய்யும் உணர்வுகள் - இது நிலை பேரில்லாத பாவம்) என்றும் வழங்கப் பெறும். அஃதாவது,

காரணம் - விபாவம்

காரியம் - அநுபாவம்

துணைக்காரியம் - சஞ்சாரி பாவம்

என்று வழங்கும். இந்த விபாவ அநுபாவங்களால் வெளிப்படும் ஸ்தாயி பாவமே ரஸ்ம்' அல்லது 'சுவை' என்று பெயர் பெறும்.

3. ஒற்றுமையுடைய பாவத்தால் கேடுறாமல் நிலை பெறுதலாவது ஒர் அழகிய மாதினைக் கண்டு, அவளிடம் காதல் கொண்டான் ஒருவன். பின்னர் அவளைவிட அழகினையுடைய வேறொரு மாதினைக் காணும்போது பின்னவள்பால் காதல் செலுத்தாமல், முன்னைய மாதின் நினைவுண்டாகி, அவள்பால் காதல் கொள்ளுவது. வேற்றுமையுடைய பாவத்தால் கேடுறாமல் நிலை பெறுதலாவது: ஒரு மகள்பால் காதலித்தான் ஒருவன். பின்னர் இளமகள் ஒருத்தியின் சாவு, பிரிவு முதலியவற்றைக் கண்ட்விடத்தும் காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா’ என்றவாறு அவற்றால் சோகமும் வெறுப்பும் உண்டாகி, முன் காதலிக்கப் பெற்றவளிடத்து முன்னைய காதல் கெடாதிருப்பது.