பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

43



அப்பதியில் இருந்த சைவத் தொண்டர்கள் அடியவரை வரவேற்று உபசரித்தார்கள்.

பின்னர்த் திருநாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூரை விட்டு திருமாணிக்குழி, திருத்தினைநகர் ஆகியவற்றைத் தரிசித்துக் கெடில நதியைத் தாண்டித் திருவதிகையை அடைந்தார். அப்பதியில் இருந்த சிவனடியார்கள் ஊரை அலங்கரித்து, திருநாவுக்கரசரை வரவேற்றனர். அப்பெரியவர் திருவதிகை வீரட்டானேஸ்வரரைப் பாடித் தொண்டு செய்துவந்தார்.

மஹேந்திரன் மதமாற்றம்

திருநாவுக்கரசர் வரலாறு முழுவதையும் தக்கார் வாயிலாகக் கேள்வியுற்ற மஹேந்திரவர்மன் தான் அவருக்குச் செய்த கொடுமைகளை எண்ணி எண்ணி மனம் வருந்தினான்; தன் தண்டனைகள் அனைத்தையும் திருத்தொண்டின் உறைப்பாலே வென்ற அவரது சிவபக்தி மேன்மையை எண்ணி எண்ணி வியந்தான். உடனே அவன் உள்ளம் சிவத்தைத் துணையெனக் கொண்டது. அவன் குடிகள் . சைவப்பற்று மிக்குடையராதலைக் கண்டான், தானும் சைவன் ஆனான்.

குணபர ஈஸ்வரம்

மஹேந்திரன் சைவன் ஆனவுடன் பாடலிபுரத்தில் இருந்த சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடிக்கச் செய்தான், அச்சிதைவுகளைத் திருவதிகைக்குக் கொண்டு வரச் செய்தான். அங்குத் திருநாவுக்கரசர் திருவுள்ளம் மகிழவோ, என்னவோ, தெரியவில்லை; அச்சிதைவுகளைக் கொண்டு சிவன்கொவில் ஒன்றைக்