பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

பல்லவப் பேரரசர்


ராஷ்டிரம் எனப் பல ராஷ்டிரங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது. இராஷ்டிரம் பல விஷயங்களாக (ஜில்லாக்களாகப் பிரிந்திருந்தது. ஆயின், தொண்டைநாடு என்ற துண்டக ராஷ்டிரம் மட்டும் சங்க கால முதலே - இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிந்திருந்தது. அக்கோட்டங்கள்: 1. புழல் கோட்டம் 2. ஈக்காட்டுக் கோட்டம். 3. மணவிற் கோட்டம் 4. செங்காட்டுக் கோட்டம் 5. பையூர்க் கோட்டம் 6. எயில் கோட்டம் 7. தாமல் கோட்டம் 8. ஊற்றுக் காட்டுக் கோட்டம் 9. களத்தூர்க் கோட்டம் 10. செம்பூர்க் கோட்டம் 11 ஆம்பூர்க் கோட்டம் 12. வெண்குன்றக் கோட்டம் 13. பல்குன்றக் கோட்டம் 14. இலங்காட்டுக் கோட்டம் 15.கலியூர்க்கோட்டம் 16.செங்கரைக்கோட்டம் 17.படுவூர்க் கோட்டம் 18. கடிகூர்க் கோட்டம் 19. செந்திருக்கைக் கோட்டம் 20. குன்றவட்டான கோட்டம் 21. வேங்கடக் கோட்டம் 22.வேலூர்க்கோட்டம் 23.சேத்தூர்க்கோட்டம் 24. புலியூர்க்கோட்டம் என்பன.

அரச முறை

பல்லவர் அரச முறை, தந்தையிடத்திலிருந்து முதல் மகனுக்கே உரிமையாக வந்து கொண்டிருந்தது. மகன் இல்லாத இடத்துப் பங்காளிகள் அரசவுரிமை ஏற்பது வழக்கம். அரசன் திடீரெனப் பிள்ளை இன்றி இறப்பின்.அமைச்சர் முதலிய அரசியல் பொறுப்புள்ளவர் அரச் மரபில் தக்கார் ஒருவரைத் தேர்ந்தெடுத்தல் மரபு.

அரசர் குடும்பம்

பல்லவ அரசர் உத்தம அரச இலக்கணங்கள் அமையப் பெற்றவர்கள், மணிமுடி தரித்த மன்னர்கள்.