பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

IX
முகவுரை

வேதம் - வேங்கடராய சாத்திரியார், M.A., ஆவர். இவரது உதவி என்றும் மறக்கற்பாலதன்று. என்னைப் பாகூருக்கு அழைத்துச் சென்றவரும், பாகூரைப்பற்றி விளக்கமான படம் வரைந்து உதவியவருமாகிய திருவாளர் புதுவை ரா. தேசிகப்பிள்ளை, B.A.,B.L., அவர்கள் உதவி பாராட்டற் பாலது. எனக்குக் காஞ்சியில் பல வசதிகள் அளித்து எல்லாக் கோவில்களையும் என் விருப்பம்போற் காண வசதி செய்துதந்த ‘குமரன்’ அச்சக உரிமையாளர் திருவாளர் குப்புசாமி முதலியார் அவர்கட்கும் எனது நன்றி உரித்தாகுக. இங்ஙனமே மகாபலிபுரம், வல்லம், மண்டபப்பட்டு, திரிசிரபுரம் முதலிய இடங்களில் எனக்கு வேண்டிய வசதிகள் செய்து பல்லவர் குகைக் கோவில்களைக் காணச்செய்த பெருமக்கட்கு எனது அன்பு உரியதாகும்.

பல்லவர் வரலாற்றை அறிய அரும்பாடுபட்ட பெரியோர் அனைவர்க்கும் பல்லவர் வரலாறு திறம்படஎழுதிய பேரறிஞர்கட்கும் என் வணக்கமும் நன்றியும் உரிய ஆகுக. அப் பெருமக்கள் உழைப்பின் பயனே இந்நூல் வெளிவரச் செய்தது என்றால் மிகையாகாது.

இரண்டு ஆண்டுகளாக என்னை இப்பணியில் ஈடுபடுத்தி இதனை நன்முறையில் வெளிக்கொணர்ந்த சென்னை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினருக்கும், இதற்கு அணிந்துரை எழுதிய திருவாளர் கோவைகிழார் அவர்கட்கும் எனது உளமார்ந்த நன்றி உரித்து.

சேக்கிழார் அகம்
சென்னை
மா.இராசமாணிக்கம்