பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரமேசுவரவர்மன்

141



(2) கால் பெருவிரலால் கயிலாயத்தையும் தசானனையும் பாதாளம்வரை அழுத்திய அஜனை (சிவனை) ஸ்ரீநிதி (தலைமேல்) வைத்துள்ளான். (பரமேசுவரன் சிவனைத் தலையில் தாங்கியுள்ளான்.)[1]

(3) பத்தி நிறைந்துள்ள மனத்தில் பவனை (சிவனை)யும் கைம்மீது அழகிய நகைபோல நீலத்தையும் தாங்கியுள்ள ஸ்ரீபரன் நீண்டகாலம் வெற்றியுறுவானாக.

(4) பகைவர் நாட்டை வென்று ரனஜயன் என்றுபெயர் பெற்ற அத்யந்தகாமராசன் இந்தச் சம்பு (சிவன்) கிருகத்தைக்[2] கட்டுவித்தான்.

(5)-(6) அத்யந்தகாமன் தன் பகைவர் செருக்கை அழித்தவன். ஸ்ரீநிதி, காமராகன், ஹராராதனத்தில் ஆஸக்தி உடையவன்; சிவனுடைய அபிடேக நீரும் மணிகளால் ஆன தாமரைகளும் நிறைந்த மடுப்போலப் பரந்த தனது தலைமீது சங்கரன் எப்போதும் குடிகொண்டிருக்கப் பெற்றுள்ளான்.[3]

(7) அரசன் சங்கரனை அடைய விரும்பி, இந்தப் பெரிய சிவ மந்திரத்தை (கோவிலை)த் தன் குடிகளின் அவா முற்றுப் பெறக் கட்டுவித்தான்.[4]

(8) தீயவழியில் நடவாமல் காக்கும் சிவன் எவனது உள்ளத்தில் இரானோ, அவனுக்கு ஆறுமுறை திக் (சாபம்) அத்யந்த காம பல்லவேஸ்வரக்ருஹம்.[5]


  1. கண்மணியாலான சிவலிங்கத்தைத் தலைமுடியாக அணிந்திருந்தான் என்பது பொருள், P.T.S.Aiyangar’s “Pallavas’ Part.II. P.68.
  2. இப்பொழுதுள்ள கணேசர்கோவில் என்பது சிவபெருமானுக்காகக் கட்டப்பட்டது.
  3. இதன் பொருள் சென்ற பக்கத்து அடிக்குறிப்பிற் காண்க.
  4. இதனால் குடிகட்கிருந்த சைவப்பற்றை நன்குணரலாம் அன்றோ? மந்திரம் - கோவில்.
  5. P.T.S. Aiyangai’s “Pallavas’ Part II.pp.66-68.