பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
148
பல்லவர் வரலாறு


துறக்க வேண்டியவன் ஆயினான். அவன் அவைப் புலவரான தண்டி எனப்பாரும் கற்றோர் பிறரும் நாடெங்கும் அலைந்து திரிந்தனர். குடிகள் பெருந்துன்பம் உழன்றனர் சாலைகள் சீர்கெட்டுக் கிடந்தன; குடும்பங்கள் நிலைகெட்டன. அரசியல் நிலை தடுமாறிற்று,’ என்று தண்டி தாம் எழுதியுள்ள ‘அவந்தி சுந்தரி கதா’ என்னும் நூலிற் கூறியுள்ளார்.

இக்கொடிய பஞ்சம் கி.பி. 686 முதல் 689 வரை (3 வருடகாலம்) இருந்ததாகச் சீன நூல் ஒன்று கூறுகிறது. இந்தக்காலம் இராசசிம்மன் காலமே ஆகும் அன்றோ? அப்பொழுது வச்சிரபோதி என்னும் பெளத்தப் பெரியார் ஒருவர் காஞ்சிக்கு வந்தனர். அவரை இரண்டாம் நரசிம்மவர்மன் (இராசசிம்மன்) வற்கடம் தீர இறைவனை வேண்டுமாறு வேண்டியதாக முற்சொன்ன சீனநூல் கூறுகிறது. அப் பெரியார் வேண்ட மழை வந்ததென்று அந்நூல் கூறுகிறது.[1] (இராசசிம்மன்) வற்கடம் தீர்ந்த பிறகு காஞ்சியில் இருந்த ‘கடிகையைச் செவ்வைப் படுத்தினான்’ என்று வேலூர் பாளையப் பட்டயம் கூறலைக் கொண்டும் பஞ்சக் கொடுமையை நன்குணரலாம்.

சிவபத்தன்

இராசசிம்மன் பஞ்சத்திற்குப் பிறகு, தென் இந்தியாவில் புகழ் பெற்று விளங்கும் கயிலாசநாதர் கோவிலைக் காஞ்சியிற்கட்டினான்; பிறகு காஞ்சியில் ஐராவதேச்சுரர் கோவிலையும் கட்டினான்; மகாமல்லபுரத்தில் கடற்கரை ஒரமாக உள்ள கோவிலை அமைத்தான் பனமலைக்கோவிலையும் அமைத்தான்; ஒவ்வொரு கோவிலிலும் தன் விருதுப் பெயர்களை வெட்டு வித்தான். கைலாசநாதர் கோவிலில் மட்டும் ஏறத்தாழ 250 விருதுப் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றில் ‘ரிஷப லாஞ்சனன், ஸ்ரீசங்கர பக்தன்,


  1. Dr.C.Minakshi’s “Administration and SocialLife underthe Pallavas’ pp.114-118.