பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/205

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
185
வடக்கிருத்தல்


பல்லவர்-இரட்டர் போர் 1

துருவன் அரசனானவுடன். பெரும் படையொடு புறப்பட்டுத்தன் தமையனுக்கு உதவி புரிந்தோரை வெல்ல விழைந்தான் முதலில் கங்கபாடி அரசனான சிவமாறனை வென்று, தன் முதல் மகனான கம்பரசனைக் கங்கபாடியை ஆளுமாறு விடுத்துக் காஞ்சியை அடைந்தான் காஞ்சி நகரத்தை முற்றுகையிட்டான். அப்பொழுது நடந்த போரில் தந்திவர்மன் தோல்வியுற்றான். தனது பெரிய யானைப் படையைத் துருவனுக்கு அளித்துச் சரண்புகுந்தான் என்று இரதனபுரப் பட்டயங்கள் குறிக்கின்றன.

துருவன், இங்ஙனம் அடைக்கலம் புக்க தந்திவர்மனைத் தனக்கு அடங்கிக் கப்பம் கட்டுமாறு செய்து மீண்டான்.

பல்லவர் - இரட்டர் போர் 2 (கி.பி. 803)

கோவிந்தன் 3: கங்கபாடி, வேங்கி இவற்றைத் தன் பேரரசுடன் சேர்த்த பேரரசனானதுருவன் கி.பி.794இல் இறந்தான். இவன் இறக்கு முன்பே தன் மக்களான கம்பரசன், கர்க்கா சுவர்ணவர்ஷன், கோவிந்தன். இந்திரன்முதலியோருள்கோவிந்தன் என்றதன் மூன்றாம் மகனுக்கே முடிசூட்டினான். அதனால் பெருவெளி படைத்த (மூன்றாம்) கோவிந்தன் கி.பி.794இல் பேரரசன் ஆனான்.[1]

இதனால் முதல் மகனான கம்பரசன் மனம் புழுங்கினான். அவனுடன் சிற்றரசர் பல சேர்ந்தனர். இவர்கள் சூழ்ச்சியை அறிந்த் கோவிந்தன் தன் தமையனாள கம்பரசனையும் அவனுடன் சேர்ந்திருந்த சிற்றரசர் பன்னிருவரையும் போரில் வென்றான். பிறகு குழப்பம் இல்லை.

கோவிந்தன்-தந்திவர்மன் போர்: கோவிந்தன்தன்தமையனுடன் சேர்ந்திருந்த சிற்றரசரைத் தனித்தனியே வென்று, அவர் உரிமைகளைப் பறிமுதல் செய்தான். அங்ஙனம் செய்து கொண்டு


  1. Altekar’s Rashtrakutas and their Times, pp.50, 55