பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
218
பல்லவர் வரலாறு


வாயில் கேட்பார் (Under Secretaries) முதலியவர்.பல்லவர் ஆட்சியில் அரசியலில் இடம் பெற்றிருந்தனர் என்பதை அறியலாம்.[1]

அறங்கூர் அவையம்

பல்லவப் பெருநகரங்களில் அறங்கூர் அவையங்கள் இருந்தன. அவை ‘அதிகரணங்கள்’ எனப் பெயர் பெற்று இருந்தன என்பது மகேந்திரன் எழுதியுள்ள மத்தவிலாசப் பிரகசனத்தால் தெரிகிறது. அறங்கூர் அவையத்துத் தலைவர் ‘அதிகரண போசகர்’ எனப்பட்டனர். அதிகரணம் என்பது பெரிய அறங்கூர் அவையாகும். கரணம் என்பது சிற்றுரில் இருந்த அறங்கூர் அவையாகும். கரண அலுவலாளர் (தலைவர்) அதிகாரிகள் எனப்பட்டனர். பெரிய புராணத்தைக் கொண்டு சில சுவையுள்ள செய்திகளை அறியலாம். சிற்றுர்களில் சான்றோர் அறங்கூர் அவையத்தலைவராக இருந்தனர். மூன்றாம் நந்திவர்மன் (கழற்சிங்கன்) காலத்தில் திருவெண்ணெய் நல்லூரில் ஊரவை இருந்தது. அது வழக்கை விசாரித்து முடிவு கூறியதைப் பெரியபுராணத்தில் விரிவாகக் காணலாம். வழக்கில் முடிவுகூற மூன்று சான்றுகள் தேவை: அவை, (1) ஆட்சி (2) ஆவணம் (3) அயலார் காட்சி என்பன. இவற்றுள் ஆட்சி என்பது நீண்ட காலமாகக் கையாண்டு வரும் ஒழுக்கம் (அதுபோக பாத்தியம்). ஆவணம் என்பது வழக்கை முடிவு செய்ய உதவும் சுவடி, ஒலை முதலிய எழுத்துச் சீட்டுகள். அயலார் காட்சி என்பது வழக்கு நிகழ்ச்சியைக் கண்டார் கூறுவது. ஒப்பந்தம் ‘இசைவு’ (Will) எனப்படும். அந்தந்த ஊரார் கையெழுத்துகளையும் கை ஒப்பங்களையும் தனியாக ஊர்ப்பொது அரசாங்க அறச்சாலைப் பாதுகாப்பில் வைக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. சிற்றுக்களில் இருந்த அறங்கூர் அவைய அலுவலாளன் காரணத்தான் எனப்பட்டான். பத்திரத்தில் சாட்சிகளாகக் கை ஒப்பமிட்டவர் ‘மேல் எழுத்திட்டவர்’ எனப்பட்டனர்[2]

இத்தகைய அறங்கூர் அவையங்களில் கைக்கூலி(லஞ்சம்) தாண்டவமாடியது என்பதை மகேந்திரவர்மனே தான் வரைந்துள்ள


  1. S.I.I.Vol.II. Page 361.
  2. C.K.Subramania Mudaliar’s “Sekkilar’ pp.68-72 (Madras University Lectures, 1930)