பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/239

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
219
சமணசமயப் புகழ்பாக்கள்


மத்தவிலாசத்தில் குறிப்பிட்டுளான். இக்காலத்தில் உள்ளது போல் உயர்நீதி மன்றம் (High Court) அக்காலத்திலும் இருந்தது. அது தருமாசனம் எனப்பட்டது. அது பல்லவப் பேரரசின் பொது மன்றம் ஆகும். அஃது அரசனது நேரான மேற்பார்வையில் இருந்தது. ‘அதிகரணம்’ என்பது குற்ற வழக்குகளை (Criminal) விசாரிக்கும் மன்றம் எனவும், ‘தருமாசனம்’ என்பது பிற வழக்குகளை (Civil) விசாரிக்கும் மன்றம் எனவும் கோடல் பொருத்தமாகும்.[1]

அரண்மனை அலுவலாளர்

இவருள் பொற்கொல்லர். பட்டய எழுத்தாளர், புலவர் முதலியோர் சிறப்பாகக் குறிக்கத்தக்கவர். (1) அரண்மனைப் பொற்கொல்லர் அரண்மனைக்கு வேண்டிய அணிகலன்களைச் செய்ததோடு செப்புப்பட்டயங்களில் அரசர் ஆணைகளைப் பொறித்துவந்தவர் ஆவர். மாதேவியாகிய அரசிக்கு அணி செய்த பொற்கொல்லர். மாதேவி பெருந்தட்டார், என்று பட்டயத்தில் குறிக்கப்பட்டுள்ளர். இப்பொற்கொல்லர் தம் மைந்தரும் பெயரரும் அரண்மனைப் பொற்கொல்லராகவே இருந்துவந்தனர் என்று பட்டயம்பகர்கின்றது. அரசனுக்கு அணிகள் முதலியன செய்து வந்த பொற்கொல்லன் அரசர் விருதுப்பெயருடன் ‘பெருந்தட்டான்’ என்பது சேர்த்து வழங்கப்பட்டான். (2) பொற்கொல்லர் அல்லாமல் செப்புப் பட்டயங்களைத் தீட்டப்பட்டய எழுத்தாளர் என்பவரும் இருந்தனர். அவர் அலுவலும் வழிவழி வந்ததாகும். (3) அரசர் மெய்ப்புகழை நாளும் பாடும் புலவர்.பல்லவர் அரண்மனையில் இடம்பெற்று இருந்தனர். அவர்கள் கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் வடமொழியிலும் தமிழ்மொழியிலும் கவிகளைப் பாடியுள்ளனர். உதயேந்திரப் பட்டயத்தில் அரசனது மெய்ப்புகழை வரைந்த புலவன், மேதாவிகள் மரபில் வந்தவனும் புகழ்பெற்ற சந்திரதேவன்


  1. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas’ pp. 53-55.