பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/256

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
236
பல்லவர் வரலாறு


(2) நந்தி முத்திரை கொண்ட சில காசுகளில் ‘ஸ்ரீபரன், ஸ்ரீநிதி’ என்பன குறிக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் இராசசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மனைக் குறிப்பன என்பது மகாபலிபுரம் - தருமராசர் தேரில் உள்ள தொடர்களாலும் கயிலாசநாதர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளாலும் நன்கறியலாம். எனவே, இக்காசுகள் அவன் காலத்தன ஆகும்.

(3) நந்தி முத்திரையுடன் மீன் பொறிக்கப்பட்டுள்ள காசுகளிலும், ஸ்ரீபரன், ஸ்ரீநிதி என்பன காணப்படுகின்றன. ‘மீன்’ பாண்டியர்க்கே உரியது. இராசசிம்மன் காலத்தில் பாண்டிய மன்னனாக இருந்தவன் கோச்சடையன் இரணதீரன் என்பவன். இவன் பெரிய புராணம் கூறும் நின்றசீர் நெடுமாறனுக்கும் மங்கையர்க்கரசியாருக்கும் பிறந்தவன். இவன் மகன் இராசசிம்மன் எனப் பெயர் பெற்றான். இதைக்கொண்டும் மீன் கொடி பல்லவர் காசுகளில் இருத்தலைக் கொண்டும், கோச்சடையன் இரணதீரன் இராசசிம்ம பல்லவனின் மகனை மணந்து, பிறந்த குழந்தைக்குப் பல்லவ இராசசிம்மன் (பாட்டன்) பெயரையே இட்டிருக்கலாம் என்று அறிஞர்[1] கருதுகின்றனர். அங்ஙனமாயின், பல்லவப் பேரரசை மருமகனான கோச்சடையன் பெருமைப்படுத்தி இருக்கலாம். அதற்கு அடையாளமாகப் பல்லவ மன்னன் பாண்டியன் இலச்சினையைத் தன்காலத்துக் காசில் பொறித்தல் முறையே. இதனை வலியுறுத்த,


  1. மகேந்திர வர்மன் காலத்தவராகிய அப்பரும், நரசிம்மவர்மன் காலத்தவராகிய அப்பரும் சம்பந்தரும் மிழலை நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்கத் திருவிழிமிழலையில் கோவில் கொண்டிருந்த சிவபிரானிடம் (கோவில் பண்டாரதத்திலிருந்து) பொற்காசுகள் பெற்று அடியார்க்கு உணவு வழங்கினர் என்னும் பெரியபுராண தேவாரச் செய்திகள் இங்குக் கருதற்பாலன. இங்ஙனம் காணப்பெறும் பெரியபுராண - தேவாரச் செய்திகள் பல, பல இடங்களில் பல்லவர் வரலாற்றுச் செய்திகளுடன் ஒன்றுபடல் காணத்தக்கது. பெரியபுராணமும், தேவாரப் பதிகங்களும் பல்லவர் வரலாறு காட்ட இலக்கியச் சான்றாக நின்று எத்துணைப் பேருதவி புரிகின்றன என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும்;- Vide Appar Puranama SS. 235-261.

    Prof. J. Dubreuil’s “Pallavas,’ p.63.