பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

243



தாயார் செய்த செயல் ஒன்றைப் பாராட்டிக் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டதாகும்.[1]

‘பிள்ளைப்பாக்கக் கிழார்’ என்பவன் செய்த நற்செயல் ஒன்றின் நினைவிற்காக, அவன் தம்பியான அய்யாக்குட்டி யார் என்பவன் பிள்ளைப்பாக்கத்தில் இருந்த தனது நிலத்தில் ஒரு பகுதியை அவ்வூர்ச் சிவன் கோவிலுக்கு எழுதி வைத்தான்.[2]

இம்மூன்று சான்றுகளாலும், பல்லவர் காலத்தில் தனிப்பட்டவர் நினைவிற்காகவும் அவர் தம் மதிப்பிடத்தக்க செயலுக்காகவும் குறிப்பிட்ட தொகையை அல்லது நிலத்தைக் கோவிலுக் களித்து அறப்பணி செய்தல் மரபு என்பது நன்கு புலனாகிறது.

உருவச் சிலைகள்

பல்லவர் காலத்தில் உருவச் சிலைகள் செய்யப்பட்டன என்பதற்குக் கல்வெட்டுச் சான்று இல்லை எனினும், ஆதிவராகர் கோவிலில் உள்ள சிம்ம விஷ்ணு, மகேந்திரவர்மன் உருவச் சிலைகளையும், தந்திவர்மன் ஆட்சிமுதல் தோன்றிய வீரக்கற்களில் பொறிக்கப்பட்ட உருவச் சிலைகளையும் நோக்க, இவ்வேலை பல்லவர் காலத்திற் சிறப்புற்றதென்பதை நன்கு உணரலாம்.

வீரக் கற்கள்

பல்லவர் காலத்து வீரக்கற்கள் மீது தொல்காப்பியர் காலத்துப் பழக்கம் போலவே “பெயரும் பீடும் எழுதி” உருவமும் பொறித்தல் மரபு. ஆனால் இக்கற்கள் அனைத்தும் தந்திவர்மன் கால முதலே புறப்பட்டவை. என்னை? அவன் காலத்திற்றான் பல்லவப்பெருநாடு சீர்குலையத்தொடங்கியது. பல பக்கங்களிலும் எல்லையிற் சுருங்கத்


  1. 122 of 1929.
  2. 172 of 1730