பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/338

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
318
பல்லவர் வரலாறு


பல்லவர் காலயாப்பிலக்கண வளர்ச்சியை உள்ளவாறு அறிய உதவும் அரிய நூல் என்னலாம்.

பாரத வெண்பர (கி.பி. 830-850)

இதுவும் மூன்றாம் நந்திவர்மன் காலத்து நூல்; அவனால் ஆதரிக்கப்பெற்ற பெருந்தேவனார் என்ற தமிழ்ப்புலவர் பாடியது. இதனை இந்நூலின் முதற் செய்யுளாலும் அதன்கீழ் உள்ள உரைப் பகுதியாலும் நன்கு உணரலாம்.

“வண்மையால் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால்
உண்மையால் பாராள் உரிமையால்-திண்மையால்
தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றானோ(டு)
யார்வேந்தர் ஏற்பார் எதிர்!”

உரை நடை: “எல்லையின் நிறைந்த எண்டிசை உலகத்து மலையும் மலையும் உள்ளிட்ட மண்மிசை முழுதும் மறையது வளர்க்க அல்லி பீடத்து அரிவைக்குத் தன் அழகமர் தோளே ஆலயமாக்கிய பல்லவர் கோமான் பண்டிதர் ஆலயனைப் பரவினேம்.” தெள்ளாற்றுப் போர் குறிக்கப்பட்டுள்ளதால் இந்நூல் செய்யப்பட்ட காலம் ஏறத்தாழக் கி.பி. 830-850 எனக் கூறலாம்.

உரை இடையிட்ட பாட்டுடைச் செய்யுள்: இது வெண்பா, விருத்தம், அகவல் என்ற மூவகைப் பாக்களால் ஆனது இடையிடையே கதை தொடர்புக்காக உரைநடை மிகுதியாக விரவப்பெற்றுள்ளது. இத்தகைய முறை ‘சம்பு’ எனப்படும். இந்நூலாசிரியர் காலத்தில் கங்க நாட்டில் இச் சம்பு நூல்களேயாக்கப்பெற்றன என்பது இங்கு அறியத்தகும்.[1]

ஆசிரியர் வைணவர்: பெருந்தேவனார் சிறந்த வைணவர் என்பது இந்நூலில் உள்ள கடவுள் வாழ்த்துப் பாக்கள் பலவற்றால் தெரிகிறது. சிறந்த நாயன்மாருள் ஒருவனான நந்திவர்மனது அவைப்புலவர்


  1. Ibid. p.379.