பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
களப்பிரர் யாவர்? 37

களப்பிரர் இடையீடு (கி.பி 200–300)


Page57-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg


புகாரைத் தலைநகரமாகக் கொண்டு அச்சுத விக்ரந்தன் என்னும்

களப்பிர அரசன் ஆண்டு வந்தான் என்பதைப் புத்தத்தர் குறிப்பிடுதல் கொண்டு உணரலாம்.[1] அவர் பாலி மொழியில் ‘அபிதம்மாவதாரம்’ என்னும் நூலை எழுதியுள்ளார். அவர் தமது நூலில் மேற்சொன்ன செய்தியைக் குறிப்பிட்டுள்ளனர். அப்பொரியார் காலம் புத்த கோஷரது காலமான கி. பி. 350 ஆகும்.[2]


  1. K.A.N. Sastry’s Cholas, Vol I p. 121.
  2. K.C.Law’s Life and Works of Buddagosha,’ p.43.