பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

பல்லவர் வரலாறு



இவற்றால் அறியத்தக்கவை

சிவஸ்கந்தவர்மன் இளவரசனாக இருந்தபொழுது தன்னை ‘இளம்பேரரசன்’ (யுவ மகாராசன்) என்று கூறுவதால், அவன் தந்தை பேரரசனாகத்தான் இருந்தான் என்பது பெறப்படுகிறது.

பேரரசன் (மகாராசன்) என்னும் பட்டம் சாதாரண சிற்றரசரும் சாதாரண தணி அரசரும் வைத்துக்கொள்ளல் வழக்கமாக இருந்தது. ஆகலின், சிவஸ்கந்தவர்மனின் தந்தை ஒரு சாதாரண அரசனாகவே இருந்தான் என்பது வெளிப்படை. இது, சிவஸ்கந்தவர்மன் பட்டம் பெற்றபின், தன்னை ‘மகா ராசாதிராசன்’ என்று கூறிக்கொள்வதாலும் வலியுறும் சிவஸ்கந்தவர்மன் இங்ஙனம் தன்னைத்தான் பட்டம்பெற்ற 8ஆம் ஆண்டிலே கூறிக்கொள்வதாலும், அவன் இளம் பேரரசனாக இருந்தபொழுதே காஞ்சியிலிருந்து பட்டயம் விடுத்தததாலும், அவன் தந்தை காஞ்சியிலிருந்து பட்டயம் விடுத்ததற்குச் சான்று இன்மையாலும். சிவஸ்கந்தவர்மன் பேரரசன் செய்யத் தக்க அக்நிஷ்டோமம், வாஜபேயம், அஸ்வமேதம்[1] என்னும் பெரு வேள்விகள் செய்துள்ளமையாலும்-பல்லவப் பேரரசை ஏற்படுத்திய வனும் அதற்குத் தலைநகரமாகக் காஞ்சியைக் கண்டவனும் இச் சிவஸ்கந்தவர்மனே ஆதல் வேண்டு என்று கூறல் தவறாகாது.[2]

வடநாட்டு வென்றி

சாதவாகனர் வீழ்ச்சிக் காலத்தில் (கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில்) கிருஷ்ணை-குண்டூர்க் கோட்டங்கள் கொண்ட நிலப்பகுதி இக்குவாகர் ஆட்சியில் இருந்தது அப் பகுதிக்குத்


  1. அக்திசுடோமம்:- வசந்தகாலத்தில் பலநாள் தொடர்ந்து செய்யப் படும் வேள்வி. வரஜபேயம்:- உயர்ந்த அரச நிலையின் பொருட்டுச் செய்யப்படும் வேள்வி. அஸ்வமேதம்:- பேரரசன் என்பதை அரசர் பலரும் ஒப்புக் கொண்டமைக்கு அறிகுறியாகச் செய்யப்படும் பெரு வேள்வி.
  2. Vide Hera’s “Studies in Pallava History”, p.11
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/66&oldid=583591" இலிருந்து மீள்விக்கப்பட்டது