பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52
பல்லவர் வரலாறு


வடபகுதியும் கடப்பை-அனந்தப்பூர்க் கோட்டங்களும் கொண்ட நிலப்பரப்பாகும். இது கிழக்கே திருப்பருப்பதத்தை எல்லையாகக் கொண்டது. ஏறக்குறைய கி.பி. 350 இல் சமுத்திர குப்தன் படையெடுத்துச் சென்றபின், வீரகூர்ச்சவர்மன் என்னும் பல்லவன் இவர்தம் பெண்ணை மணந்து குந்தள நாட்டையும் பெற்றான் என்று பொருள்படும் முறையில் பல்லவர் பட்டயம் எழுதப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் வைசயந்தி எனப்படும் வனவாசி ஆகும்.

கதம்பர் (கி.பி. 350-600)

ஏறத்தாழக் கி.பி. 350 இல் மயூரசன்மன் என்னும் வீரமறையவன் திருப்பருப்பதத்தைச் சேர்ந்த நாடுகளைக் கைப்பற்றிப் பின் சித்தூர், வடஆர்க்காட்டுக் கோட்டங்களை ஆண்ட பாண அரசரை அடிமைப்படுத்திப் பல்லவர் நாட்டு எல்லைப் புறத்தில் குழப்பம் உண்டாக்கிக் கொண்டு இருந்தான். அப்பொழுது அரசனாக இருந்த பல்லவன் மயூரசன்மனுடன் சந்து செய்து கொண்டு, அவனைத் தன் படைத் தலைவனாகவும் சிற்றரசனாகவும் ஏற்றுக் கொண்டான்; பின் மயூரசன்மன் நாளடைவில் குந்தள நாட்டிற்கே தனி அரசன் ஆனான். இவன் தன் நாட்டைப் பல வழிகளிலும் விரிவாக்கினான். இவன் மரபினர் கீழ்க்கண்டவராவர்.

மயூரசன்மன் (கி.பி. 350-375)
கங்க வர்மன் (கி.பி. 375-400)
பகீரதன் (கி.பி. 400-425)
இரகு காகுத்த வர்மன் (கி.பி. 425-450)
சாந்தி வர்மன் (கி.பி. 450-475)
மிருகேச வர்மன்(கி.பி. 475-500)
(கி.பி.500-525) இரவிவர்மன் சிவரதன் பானுவர்மன்
அரிவர்மன்.86 (கி. பி. 535-570)

86. D. Sircar’s “Successors of the Satavahanas’ pp.232, 238-240