பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96.

பல வகை விளையாடல்கள்

தேனே, பசுங்கிளியே, செல்வமே கண்வளராய்; பெருஞான வாரிதியாய்ப் பேருலகி லே உதித்த திருஞான சம்பந்தச் சீமானே, கண்வளராய்; தப்பான புன்சமணச் சார்பைக் கழித்துயர்ந்த அப்பா திருநாவுக் கரசே, நீ கண்வரைாய்;. வேதாவும் காணு விமலனேப் பேதையிடம் தூதா அனுப்பும் சுந்தரனே, கண்வளராய். வேணிப் பரன்கமல மெல்லடியே போற்றிசெயும் மாணிக்க வாசகப்பேர் மாதவனே, கண்வளராய். ஆதி மறைப்பொருளே அகிலமிசை வள்ளுவராய், நீதி முறையருளும் நின்மலனே, கண்வளராய்.

வெம்மாயை நீக்கி ஒளியாக வந்துதித்த

நம்மாழிவாரே எங்கள் நற்றவமே, கண்வளராய்.

கருமமெலாம் போக்கும் கதியைத் தரவந்த

திருமழிசை ஆழ்வாரே, செம்மலே, கண்வளராய.

கராமாளச் செய்து கஜம் அளித்தோன் சீர்பாடும்.

இராமா நூஜினே, இலஞ்சியமே, கண்வளராய். அன்ன நடை மெல்லியர்கள் ஆசையுடன் முத்தமிடும்

நன்னு கன்ன தல்லிஎனும் நாயகியே, கண்வரைாய.

(9)

ஆராரோ, ஆரிரரோ, ஆராரோ ஆரிரரோ!

தவமாம் தவம்இருந்தேன்; தரைமெழுகிக் கோலமிட்டேன்; கண்டகண்ட கோவிலுக்குக் கைஎடுத்துக் கும்பிட்டேன்; காணுத கோவிலுக்குக் காணிக்கை கட்டிவச்சேன்; நேராத கோவிலுக்கு நெய்விளக்கு ஏத்திவச்சேன்; போகாத கோவிலுக்குப் பொன்முடி கட்டிவச்சேன்; ஆயிரமாம் காலம் அரசுக்கு நீர்சொரிஞ்சேன்; தொண்ணுாறு காலம் துளசிக்கு நீர்சொரிஞ்சேன்; நட்டநடுச் சட்டத்திலே தொட்டிலிட வந்தாயோ? கொட்டாரப் பந்தலிலே கோமேதகத் திண்ணேயிலே விஸ்தார வீதியில்ே விளையாட வந்தாயோ?. பிள்ளேக் கலிதீர்த்த கண்மணியே, கண்வளராய்.