பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் 97

(11)

ஆராரோ, ஆரரிரோ, ஆராரோ ஆரரிரோ; முத்தே, பவழமே, முக்கனியே சக்கரையே, கொத்து மருக்கொழுந்தே, கோமளமே கண்வளராய்; பொன்னே, நவமணியே, பூங்கோடியே, பூஷணமே, அன்னமே, எம்முடைய ஆசையே கண்வளராய்; கற்கண்டே பாகே, கனிரசமே, செங்கரும்பே, கற்பகமே, எம்முடைய காதலனே, கண்வளராய்; திந்திக்கும் பாலே, தெவிட்டாத தெள்ளமுதே, சித்தத்தி னுட்கனிக்கும் செங்கரும்பே, கண்வளராய்; ஆணிப் பசும்பொன்னே, ஆராத தெள்ளமுதே, மாணிக்கமே எங்கள் வாழ்வே, நீ கண்வளராய்; அத்தை அடிச்சாளோ? அம்மான் அடிச்சானே? முத்துக்கண் ணிர்நிறுத்தி மோனமாய்க் கண்வளராய்; பாட்டி அடிச்சாளோ பால் வார்க்கும் கையாலே? வாட்டம் ஒழிந்து நீ மைந்தனே, கண்வளராய், மாமி அடிச்சானோ மல்லிகைப்பூச் செண்டாலே? சாமி, புலம்பாதே சண்முகமே, கண்வளராய், அத்தை மடிமேலும் அம்மான்மார் தோள்மேலும் வைத்து முத்தாடும் மகிபனே, கண்வளராய்.

(12)

(சோர நாயகனுக்குக் குறிப்பாகப் புலப்படுத்தியது.1 ஆராரோ, ஆராரோ, ஆராரோ, ஆரிரரோ, பாவற் கொடியருகே டாம்புண்டு; பல்லியுண்டு; பார்த்துக் கிடவும், பதனமாய்ப் பூச்சியரே! ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ பாலும் அடுப்பினிலே, பர்லுகனும் தொட்டிலிலே, பாலகனேப் பெத்தெடுத்த பார்த்தாவும் கட்டிலிலே ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ. - ப.வி-7

傘 ふ :