பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(00 பல வகை விளேயாடல்கள்

குட்டியம்மான் என்ன தந்தான்? குண்டு மணித்

தொட்டி லிட்டான்; செல்லம்மான் என்ன தந்தான்? செம்பவழத்தொட்டி

லிட்டான்; நல்லம்மான் என்னதந்தான்? நற்பவழத் தொட்டி

. லிட்டான்.

(19)

ஆளப் பிறந்தானுக் காரார்கள் தோழன்மார்? கிழக்குத் தெருவினிலே கிளப்புள்ளே தோழன்மார்; மேற்குத் தெருவினிலே மேதாவி தோழன்மார்; தெற்குத் தெருவினிலே தேவர்கள் தோழன்மார்; வடக்குத் தெருவினிலே வசுதேவர் தோழன்மார்.

(20)

கண்ணே அடிச்சார் ஆர்? கண்மணியைத் தொட்டார்.ஆர்; பொன்ன அடிச்சார்ஆர்? பூங்கிளியைத் தொட்டார்.ஆர்?

தாலாட்டு (21) ஆராரோ, ஆராரோ, ஆராரோ: ஆரிரரோ! ஆரார் அடிச்சாரோ? - என் - ஆலேப் பசுங்கிளியே, ஆரும் அடிக்கவில்லை; அண்ணியரும் தீண்டவில்லை; தாயும் அடிக்கவில்லை; தந்தையரும் தீண்டவில்லை; தானே அழுகிற தன்கணக்கும் பொல்லாங்கு; வேண்டி அழுகிற விளையாட்டும் பொல்லாங்கு; சித்தடியே, சித்தடியே நான் செய்ததவம் நீகேளாய்; சித்தடியே, நீபொறக்க நான் - செய்ததவம் ர்ொம்ப - உண்டு;