பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பல வகை விளையாடல்கள்

சித்தடியே, நீபிறக்க - நான் - செய்ததவம் ரொம்ப

- - உண்டு; (என்) ஆனப் பொறந்தான் அழுகிற குரல் கேட்டு மாடப் புருக்காளல்லாம் வந்து மதிலடிக்க, கூவப் பொருதே குரல்கேட்டு நிற்கிறது; பேசப் பொருதே பின்வந்து நிற்கிறது; ஆளப் பொறந்தானுக் காரார் துணை இருப்பார்? சாமத் துணையிருப்பார் சந்திரரும் சூரியரும்; பின்னே துணையிருப்பார் பெருமாளும் பிராட்டியரும்; அம்புலியை வேண்டி அரையர் தவம் வேண்டிச் சந்திரரை வேண்டிச் சரஸ்வதியைத் தான்வேண்டி.

(24)

ஆராரோ, ஆராரோ, ஆராரோ, ஆராரோ, சீரார் பசுங்கிளியே, தெவிட்டாத செந்தேனே, பேரார் குலக்கொழுந்தே, பெருமானே, ஆராரோ! இருகண் மணியே, இலஞ்சியமே, என் உயிரே, ஒருகுடைக்கீழ் நீஇவ் வுலகாள வந்தவனே? ஆராரோ! தெள்ளமுத கும்பமே, திந்திக்கும் செங்கரும்பே, பிள்ளைக் கலிதீர்த்த பெரியமத குஞ்சரமே, ஆராரோ! மாணிக்கக் கால்நாட்டி வஜ்ர வடம்பூட்டி ஆணிப்பொற் ருெட்டிவிட்டேன் அருமருந்தே கண்

வளராய்; ஆராரோ .

(25)

ஆராரோ, ஆராரோ, ஆரரோ, ஆரிரரோ என்ருல் ஜயனே, ஆராரோ, என் செல்ல மணித்துரையே, என் சீமான அடிச்சவர் ஆர்? என்வயிற்றில் வாய்த்தவனே, என் ஏக்கமெல்லாம்

தீர்த்தவனே