பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பல வகை விளையாடல்கள்

5. பாலே, பழரசமே, பகரவொண்ணுத் தெள்ளமுதே,

மேலேவிண்ணுேர் மகிழும் வித்தே,நீ கண்வளராய்.

6. வேதமனு நூற்கலேகள் விளங்கிவரும் இந்நாட்டில,

கீதமொழி கேட்கவந்த பைங்கிளியே, துயில்கொள்வாய்.

7. வண்ணமணித் தொட்டிலிலே வாய்த்த செம்பொற்

கட்டிலிலே கண்ணே, என் கண்மணியே, கற்பகமே;

நித்திரை செய்.

8. தண்டைமணி சத்தமிடத் தாய்மார்கள் முத்தமிடத்

தொண்டையுடன் வாய்மூடித் துரைமகனே, கண்ணயர் - வாய்.

9, அத்தைமணம் நோகாமல் (உன்)அண்ணன்மனம்

வேகாமல் சித்தமதில் தயை கொண்டு சிகாமணியே, - கண் உறங்காய்.

10. தாய்மார்கள் வைதாரோ? தாதியர்என் செய்தாரோ?

வாய் திறந்து சொல்லினங்கள் மன்னவனே,

- கண்வளராய்.

11. அத்தை அடிச்சாளோ? அக்காள் அடிச்சாளோ?.

சித்தான வாய்திறந்து மொழிந்துறங்காய்,கண்மணியே!

12. தங்கத்தால் யானைகளும் தந்தத்தால் சேனேகளும் அந்தமாய் நான்கொடுப்பேன்; புத்திரனே, கண் - வளராய்.

13. பொற்சரிகை வஸ்திரமும் போற்றுபல சித்திரமும்

நற்சரிகை அங்கியுமே நான்தருவேன்; நித்திரைசெய்.