பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் 10 7

முழுக வந்து நிற்கையிலே பவளக் குடைபிடித்து (மன்னர்) பக்கம்வந்து நின்னராம்;

குளம் கலங்க நீர்முழுகிக்

கொடிபோல நாமமிட்டு மலேகலங்கப் பாடிவரும் மன்னர் மருமகனே? வட்டப் பொட்டுமிட்டு - நாச்சியாரம்மன் மயிரை இடைவகுத்து - இட்ட தொரு நாமம் ஏற்குமோ மன்னரே? மன்னரும் கோதையரும் செண்பகத் தோப்பு மலேபார்க்கப் போகையிலே, - மலேமறிச்சு விருந்துசெய்யும் மலேயப்பப் பெருமாளோ? கண்ணுற் சிறுசதங்கை காலே அழுத்துமுன்னு வெள்ளிச் சிறுசதங்கை, விலைமதியா வீரதண்டை.

26

கண்ணுலம் கண்ணனுக்கு;~என்கண்ணே, கண்ணுல மின்னுசொல்லிப் பொன்னுலே ஆலாத்தி விட்ட்ாளாம் தட்டாத்தி, வாங்கு மணிவாங்கி வயிரமணிக் கல்விழைச்சு,

தூங்குமணித் தொட்டிலிலே துரைமகனே,

- - நித்திரைபோ; நித்திரைபோ, நித்திரையோ, சித்திரப் -

- - பூந்தொட்டிலிலே; உறங்காத கண்ணுக்கு ஒல்கொண்டு மைஎழுதித் தூங்காத கண்ணுக்குத் துரும்புகொண்டு மைஎழுதி அஞ்சன் மையெழுதி அழகுக்கொரு பொட்டும் இட்டு, ஆராரோ, ஆராரோ, ஆராரோ, ஆராரோ!