பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 14 பல வகை விளையாடல்கள்

குதிரைகட்டு வேணுமின்னு (என் அரசே)

சீமை கட்டி ஆண்டாயோ? வண்டலாம் பொட்டல்; வரிசைத் திருமலேயாம்; ஏலமும் கூறிச் சேத்துார் பூமி, இல்லையின்று போகையிலே வண்டுருக்கிப் பல்கடிச்சு - பெற்ற நாயகி அம்மன் மயில்வா கனத்தின் மேல் ஏறிச் செண்டுப்பூ நடைநடந்து திருநெல்வேலி போய்ச்சேர்ந்து ஊரும் திரும்பி - பெத்த நாயகி - உலகாள வந்தாளோ? நெல்லிக்களம் அஞ்சு நில அஞ்சு கோபுரமும் r கல்வேலிக் குளமோ? நெல்வேலி நாதருக்குக் கழுதாய் வளர்ந்தாரோ? நெல்லேயப்பர் கோவிலிலே நிற்குமந்தக் கல் எருது; கல்லெருதும் புல்மேயக் கண்டாளாம் காந்திமதி, திருநெல்வேலி மூலையிலே சிகரமுடி சாஞ்சுதுன்னு பொன்காசு தானமிடும் புண்ணியருர் பேரரசோ? கீன்ழத் தெருவிலே கேளிக்கைப் பார்க்கையிலே துப்பட்டி வாழ்த்தும் துரைராசர் பேரரசோ? அம்ப நெறியாட்டி அருணகிரித் தீர்ந்தமாடிக் கொம்பநெறி கைதொழுது கோடிதவம் செய்தவளோ? சீரான நோம்பு சிவன்நோம்பு நாளேயின்னு . நாராயணன் நோம்புன்னு நாமம் தரிச்சாயோ? பச்சைப் பனைகீறி - ராமசுவாமி -பாரவில்லை நாணேத்தி பத்துத்தலை அத்துவிழ (ராம சுவாமி) பல கற்றுவிழ

- - - எய்தாரோ? ஏதுடா ராவணு, இறங்கடா மேடைவிட்டு: பாரடா ராவணு,(ராமசுவாமி) படைபொருதும் பாவனையைத் வாளி கொடுத்துச (ராமசுவாமி அனுமாரைத் தூதுவிட்டுத் திருவாழியைக் கொடுத்துச் சீதை சிறை மீட்டாரோ?

- (38) பாலன் உடையான், பசித்தழுருன் தொப்பைக்குப் பால்பசுக்கள் நூரும், பணப்பசுக்கள் ஆயிரமிாம்;