பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவகை விளையாடல்கள் 9>

ஒரு புட்டான்

(வேறு விளையாட்டு) ஒரு புட்டான் திருபுட்டான்; ஒடிவா மங்களம்; பன்னன் டானே.... செக்குத் திரும்பிய செவ்வந்தி மாலை; மாடுங் கன்றும் வருகிற வேளை, மஞ்சள் தண்ணி கரைக்கிற வேளை; உன் அப்பன் பேர் என்ன? அவுத்திப்பூ.

ஓடி விளையாடுதல்

காயா? பழமா? கத்திரிப் பிஞ்சா? வந்தா வா வராட்டிப் போ.

கட்டிக் கொள்ளும் விளையாட்டு

(பெண்கள் பின்புறம் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு விளையாடும் விளையாட்டு.)

சாந்தே; ஏண்டி?

சந்தனக் கட்டை எங்கே வச்சே? அடுத்தாத்துப் பிரையிலே வச்சேன்

காணுமடி கரியாப் போறவளே, இருக்கேடி எறிஞ்சு போன கட்டே.

கட்டிய கையை வாங்கும் பாட்டு

இவ்வளவு வேணுமா பாகற்காய்?

அதுவும் வேண்டாம், பீர்க்கங்காய்;

இவ்வளவு வேண்டுமா பீர்க்காங் காய்?

அதுவும் வேண்டாம், கத்திரிக் காய்;