பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவகை விளையால்கள் # 1

மோட்டு மூச்சி நேரேரோ,

மொளகா மூச்சி நேரேரோ,

அழுகல் பழத்தைத் தின்னுப்பிட்டு

நல்ல பழத்தைக் கொண்டோடி வா.

(2)

உங்கள் அம்மா என்னென்ன போட்டாள்?

பாலும் சோறும் போட்டாள்; ஈ விழுந்ததா? எறும்பு விழுந்ததா?

எறும்பு விழுந்தது; எடுத்து விட்டுக் குடிச்சயா? சும்மா குடிச்சயா?

சும்மா குடிச்சேன்; உனக்கொரு காயும் எனக்கொரு பழமும்

தேடிக் கொண்டுவா; காயேவா, பழமேவா,

காஞ்சி புரந்து நெல்லே வா.

கல்லாங்காய் விளையாட்டு

(1)

காண்டேனிக் கூண்டு, மத்து மாதளம், ஒண்ணு உலகம், ரெண்டு ரிஷபம், - மூணு முத்தாச்சம், நாலு நந்தவனம், அஞ்சு பஞ்சாங்கம், ஆறு மனேக் காவல்; ஏழு எண்ணெய் கொண்டா, எட்டும் பட்டாசு, தொம்பல் தொலீசு, பத்தும் பாலோடி; வில்லாதி வில்லா, வீரண்ணச் சூலா, காரண்ணக் கம்பா, கற்சட்டி மாவா? கொத் தோடே தெச்சுக்கோ.