பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

6.

8.

10.

பலவகை விளையாடல்கள் 19.

நால வைத்து இரண்டெடு; நாராயணன் பேரெடு;

அஞ்சவனே அம்புலி மான்;

பஞ்சவனே பரதேசி.

ஆறவளே, போறவளே; அரும்பி நடந்தவளே; திரும்பிப் பார்த்தால் திட்டிவிளை.

ஏழை எழுதிக்கோ, . எழுதின பூவைச் சூடிக்கோ; வாடா மல்லியைச் சாத்திக்கோ;

வண்ணக் கழச்சிகொண் டாடிக்கோ,

எட்டாசி முட்டாசி, ஏகப் புரட்டாசி.

ஒன்பது குத்தி:உலேபோட்டு, சம்பாக் குத்தி சமைத் திறக்கு.

பத்துக்குச் சித்திரை பாலோட்டம்; பப்ப நாப புரத்திலே தேரோட்டம்;

ஆடும் சித்திரை அம்மனுக்கு;

அன்னக் கழச்சியும் பொன்னலே,

(இந்த விளையாட்டைச் சாதாரணமாக ஏழுவரையில் நிறுத்திக் கொள்வதே பெரும்பாலும் வழக்கம். அதல்ை இந்த ஆட்டத்திற்கு ஏழாங்கல்லென்று பெயர் சொல்வார்கள். உலாக்களில் பெதும்பைப் பருவத்தில் இந்த ஆட்டத்தைப் பெதும்பை ஆடுவதாக வருகிறது. அங்கே தலத்திற்கு ஏற்ற பொருள்கள் சொல்லப்படும்.