பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவகை விளையாடல்கள் § 1.

கில்லாப் புறண்டி

கில்லாப் பறண்டி கீப்பறண்டி,

மாப்பறண்டி; மல்லிகை மொட்டு;

உங்கப்பன் தலையிலே என்ன மூச்சி?

முறுக்கு முச்சி.

முறுக்கு மூச்சி புடிச்சவளே,

முன்னப் பழம் தின்னவளே,

காக்காப் பழம் தின்னவளே,

கையை வச்சுக் காலே மடக்கு.

மாட்டேன்;

மாட்டேன்ன வல்லேன்ன வல்லயத்தைச் சொல்

லேன்னு. நாரும் தாரும் வாழைக்காய்; தாளம் போலே கோபுரம்: கரூருப் பிரம்மா மண்டபம்; சீதாதேவி, பூமாதேவி, கையை வங்சுக் காலே மடக்கு. கைஎங்கே? காக்காய் கொண்டு போச்சு. காக்காய் எங்கே? புளிய மரத்திலே உட்கார்ந்திருக்கு. புளிய மரம் எங்கே? வெட்டி யாச்சு. வெட்டின கட்டை எங்கே? அடுப் பெரிச் சாச்சு. அடுப் பெரிச்ச சாம்பல் எங்கே? பல் தேச்சுட்டோம். பல்தேச்ச சாம்பல் எங்கே?யல் தேச்சுட்டுப் போயிட்டா. பல்தேச்ச குளம் எங்கே? புல்முளேச்சுப் போச்சு, புல் எங்கே? ஆனையும் குதிரையும் தின்னுடுத்து. ஆனஎங்கே? அரமனை வாசலில் கட்டியிருக்கு மானத்தைப்பார்; மலிவாடறது; கால்வந்துடுத்து கைவந்துடுத்து.