பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g2

பலவகை விளையாடல்கள்

(2)

கில்லாப் பறண்டி, கீப்பறண்டி, மாப்பறண்டி, மல்லிகை மொட்டு; உங்கப்பன் தலையிலே என்ன மூச்சி? முறுக்கு மூச்சி. முறுக்கு மூச்சி புடிச்சவளே, முன்ன வாழைம்பழம் தின்னவளே, உங்கப்பன் தலேயில் என்ன மூச்சி?

கையை வச்சுக் காலே மடக்கு.

தாறு தாறு வாழைக்காய்; தாளம் போலே கோபுரம்;

கையை வச்சுக் காலேமடக்கு.

கும்மி

(1)

கும்மி அடிக்கிற பெண்டுகளா, கூட்டமும் பாட்டமும் ஏதுக்கடி? மீசை முளைக்காத வெறும் பயல்கள்; வேடிக்கை பார்க்கிருர் பாருங்கள்; செங்காங் கல்லாலே வீடு கட்டிச் சேவகப் பையனை வீடழிச்சு, மீசை முளையாத வெறும்பயல்கள் வேடிக்கை பார்க்கிருர் பாருங்கடி. வாராராம் துரை வாராராம்; மதுரைப் பட்டாள விதியிலே, > ருப்பி சாராயம், கொண்டை கரைப்பணம் வச்சுச் சலாம் பண்ணி வாராராம்.