பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் 39

கையைக் கோத்துக் கொண்டு, யாராவது ஒரு பெண்ணின் தலையை அமுக்க, அவள் உட்காருவாள். அப்படி அமுக்கும் போது பாடும் பாட்டு இது.1 -

பாலாடை பாலாடை பச்சைக் கிளியாரே, பாலே வச்சேன் தண்ணிக்குப் போனேன்; குமுக்கு ராஜா குமுக்கு! உளுந்து உளுந்து செட்டியாரே, உளுத்தம் பருப் பாரே, பச்சைக் கிளியாரே, பாலே வச்சேன், தண்ணிக்குப் போனேன்; குமுக்கு ராஜா குமுக்கு.

(வேறுபாடம்)

உளுந்து உளுந்துச் செட்டியாரே, உளுத்தம் பருப்பாரே, பாலோடை பாலோடை பச்சைக் கிளியாரே, குண்டு மணித் தாயாரே, குமுக்கு ராஜா குமுக்கு.

(2)

1. ஆலப் பொறுக்கி, ஆசாரக் கள்ளி, தூக்கம் தெளிந்த தூவாடைக் காரி, பாக்கு மரத்துக்குப் பாவாடைக் காரி.

2. வீரி இரண்டெடுக்க, வீசந் தண்டெடுக்க,

மாதா மண்ணெடுக்க

8. முக்கோட்டு ராவணன், முத்துச் சரவணன்.

4. நான்கு நடந்து வா. நாகேந்திரன் தொடர்ந்துவர