பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் 4薰

பார்த்துக் கொட்டடி சின்னப் பொண்னே, பச்சை வளைக் கையாலே; நீயும் கொட்டடி சின்னப் பொண்ணே, நீலவளேக் கையாலே; தானே கொட்டடி சின்னப் பொண்ணே, தங்கவளேக் கையாலே.

கை தட்டி விளையாடல்

அப்பிச்சி தட்டிந்தி சின்னம்மா, அந்திரிக்கும் பெட்டிந்தி சின்னம்மா; தானும் தின்னிந்தி சின்னம்மா, தம்பிடிக்கு இச்சிந்தி சின்னம்மா, அத்தை அடிகிந்தே லேது. (இது தெலுங்கும் தமிழும் கலந்த பாட்டு.)

கையில் அறையும் விளையாட்டு

காது குடையது குடையது; r பனமட்டை வேகுது வேகுது (அடிக்கிறது:) பாம்பு ரங்கம் பள்ளி ரங்கம்; தேரு ரங்கம் சடார் ரங்கம்.

கொட்டை பராந்து கண்ணேக் குத்த

வருகுது வருகுது. *.

கையில் குத்தி விளையாடுதல்

அம்மா குத்து, திம்மா குத்து,

பாட்டி குத்து, பேரன் குத்து,

பிள்ளையார் குத்து, பிடிச்சுக்கோ. - (கையைப் பிடித்துக் கொள்வது.)