பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

பல வகை விளையாடல்கள்

கையை மடக்கல்

முறுக்கு மூச்சி தின்னவளே, சீதாதேவி, பூமாதேவி, கையைமடக்கு. கை எங்கே? காக்கா கொண்டு போச்சு. காக்கா எங்கே? மரத்து மேலே. மரம் எங்கே? வெட்டிப் போட்டாச்சு. வெட்டின கட்டை எங்கே? அடுப் பெரிச்சாச்சு. அடுப்பெரிச்ச சாம்பல் எங்கே? பல்தேச்சாச் சு.

பல்தேச்ச இடம் எங்கே?' பில்லு முளைச்சுப் போச்சு,

பில் எங்கே? ஆனையும் குதிரையும் தின்னுடுத்து. ஆனேன்ங்கே? அரண்மனை வாசலிலே. குதிரைஎங்கே? கோட்டை வாசலிலே.

கைவந்துடுத்து, கைவந்துடுத்து.

கொட்டடி

கொட்டி, கொட்டிடி, தையல் முத்து: குணிஞ்சு கொட்டடி, தையல்முத்து நெருஞ்சி முள்ளாம், நாவடமாம்; நாவட சக்கர கோபுரமாம்;

கோபு ரத்திலே படியளக்க,

மாமருை கோட்டைகட்ட, சிய்யாழி மோளம்வரச் . சிதம் பரத்துத் தாலி வர.

(பி-ம்.) தலம்எங்கே.