பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

பல வகை விளையாடல்கள்

பலிஞ்சடுகுடு

(1)

(முச்சுவிடாமல் சொல்லிக்கொண்டே விளையாடுவது.)

கவானைக் கவட்டி, கவட்டி. கவட்டி 
பலிஞ் சடுகுடு.
பலிஞ் சடுகுடு அடிப்பானேன்? 
பல்லு ரெண்டும் போவானேன்? 
ஒங்கப்பனுக்கும் ஒங்காயிக்கும் 
ரெண்டுபணம் தண்டம், தண்டம், தண்டம்.
தூது நாய்க் குட்டி,
தொட்டி யத்து நாய்க்குட்டி: 
வளைச்சுப் போட்ட நாய்க்குட்டி, 
இழுத்துப் போட்ட நாய்க்குட்டி;
நாய்க் குட்டி, நாய்க்குட்டி, நாய்க்குட்டி
கிக்கீக்குங் கம்பந் தட்டை; 
காசுக்கு ரெண்டு தட்டை, 
கருணைக் கிழங்கடா; 
வாங்கிப் போடடா, 
வாங்கிப் போடடா.
பலிஞ் சடுகுடு அடிக்கவே, 
பல்லு ரெண்டும் பதறவே.
                     ★ -