பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் 61

சடுகுடு மலையிலே ரெண்டான தவறி விழுந்தது கிழட்டானே கெழட்டான, கெழட்டானே,கெழட்டான, கெழட்டானே

(13)

பட்டா, பட்டா, ராவன, பறங்கிப் பட்டா, ராவணு, நெந்தியிலே குண்டு போட்டுச்

சுட்டாண்டா, ராவணு!

(15)

பலிஞ் சடுகுடு அடிப்பானேன்? பல்லு ரெண்டும் போவானேன்? ஒங்கப்பனுக்கும் ஓங்காயிக்கும் ரெண்டு பணம் தண்டம் தண்டம் தண்டம்.

பள்ளிக் கூடப் பிள்ளையின் விளையாட்டு,

குளத்துக்குப் போனேன்; நண்டு கடிச்சுது

ஊட்டுக்குப் போனேன்; செருப்படி பட்டேன்; . பள்ளிக் கூடத்துக்குப் போனேன்; பெரம்படி பட்டேன்; ஒண்ணுக்குக் கேட்டேன்;ஊட்டுக்கு ஒடியாந்துட்டேன்.