பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57


பாராண்டபுரத்து மன்னர், இந்த நிலையைப் பற்றிக் கேட்டவுடன், என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக உப்பரிகைக்கு வந்தார்.

உப்பரிகைத் தளத்தில் அரசர் வரவை எதிர் பார்த்துக் கொண்டு ஆயிரம் சிட்டுக் குருவிகள் காத்திருந்தன.

மன்னர் தலையைக் கண்டவுடன் ஒரே யடியாக அவர் மீது பாயத் துடித்துக் கொண்டு நின்றன.

ஆனால் மன்னர் முன்னேற்பாடாக இரும்புக் கவசம் அணிந்து வந்தார். முகத்துக்கு நேரே கண்ணாடி அமைந்த தலைக் கவசத்துடன் அவர் வெளியே வந்தார்.

உப்பரிகையின் மேலிருந்து அரண்மனையின் முன்புறத்தை நோக்கினார். எங்கு பார்த்தாலும் சிட்டுக்குருவிகள். இலட்சக்கணக்கான சிட்டுக் குருவிகள்.

அரசர் அந்தச் சிட்டுக் குருவிகளின் கூட்டத்தை நோக்கிப் பேசினார்.

‘சிட்டுக் குருவிகளே, நீங்கள் ஏன் இப்படிக்கூட்டமாகப் படையெடுத்து வந்திருக்