பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔 * * * * * * * * * * * * * * * * பழங்கதைகளும் பழமொழிகளும்

“இவ்வூர் நத்தம் குடியிருக்கையும் கிணறும் தொட்டியும் வெள்ளான் சுடுகாடும் கொட்ட கொட்டகாரங்களும், தலைவாய்ச்சேரியும் ஈழச்சேரியும் கம்மானச்சேரியும் பறைச்சேரியும், பறைச்சுடுகாடும் இவ்வூர் நிலத்தை ஊடறுத்துப் போய் புறவூர்களுக்குப் பாயும் வாய்க்காலும், பிடாரி புன்னதத்துறை நங்கை கோயிலும், திருமுற்றமும் பிடாரி பொதுவகை ஊருடையாள் ரீ கோயிலும், திருமுற்றமும் இவ்வூர் காடுகாள் கோயிலும் திருமுற்றமும் ஏறாடுஇவ்வூர் துர்க்கையர் கோயிலும் திருமுற்றமும் கடக்கும் இவ்வூர் காளர் பிடாரியார் ரீ கோயிலும் திருமுற்றமும் இவ்வூர் பிடாரி குதிரை வட்டமுடையார் ரீ கோயிலும் திருமுற்றமும் இவ்வூர்க் குளமும் கரையும், ஆக இறையிலி நீங்கு நிலம்..... (துறையூர் பற்றியது)" இவ்வூர் இருக்கையும், குளங்களும் கரைகளும் திருக்கோயிலும், ஐயன்கோயிலும், பறைச்சேரியும் சுடுகாடும் சிறு முன்னியூர் ஏரியில் நீர்கோத்துப் பள்ளவாயாய்க் கிடந்த நிலமும் ஆக இறையிலி நீங்கு நிலம். . . . . לל (நகரம் வெண்ணி நிலம்)" “இவ்வூர் புகழிச்சுவர கிருஹத்துதேவர் ரீகோயிலும் தளிச்சேரியும் சுடுகாடும் ஆக இறையிலி நீங்கிய நிலம்..... לל (நகரம் வேநெல் விடுதி பல்லவபுரம் பற்றியது." 5.3 காணிக்கடன் நீங்கிய இறையிலி நிலங்கள் இவையென்பதை மேலே கண்ட கல்வெட்டு ஆணைகள் வரையறுத்துக் கூறுகின்றன. இவையில்லாத எல்லா நிலங்களும், தேவதானம், சாலாபோகம், முற்றுட்டு, திருவிடையாட்டம்’ முதலிய தான நிலங்கள் கூட காணிக்கடனுக்குட்படுத்தப்பட்டு ஊராரே பொதுவாக இறையிறுத்தல் வேண்டுமென ஆணையிடப்பட்டது. இதனால் வரி ஏய்ப்புகள் தடை செய்யப்பட்டன. அவ்வாறு இறையிலியாக ஒப்புக்கொள்ளப்பட்ட நிலங்களை மேற்கண்ட கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. அவையாவன: ஊர்நத்தம், கம்மான்சேரி, பறைச்சேரி, சுடுகாடு, ஊரை ஊடறுத்துச் செல்லும் வாய்க்கால், ரீகோயில், ஐய்யன்கோயில், பிடாரி கோயில், கழனிக்குளம், பறைச்சேரிநத்தம், நந்தவனம், சேட்டையார் கோயில், கோயில் முற்றங்கள், ஈழச்சேரி, கிணறு, தொட்டி, நங்கை கோயில், பிடளி