பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 . . . . . . . . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் வேலிக்கு எத்தனை கலம் என்ற கணக்கில் நிலம் முதல் தரம், இரண்டாம் தரம் எனப் பிரிக்கப்பட்டிருந்ததைக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். எனவே கீழ்வரும் உதாரணத்தில் நெல் வருவாய் வேலிக்கு நூறுகல விகிதத்திற்குக் குறைவதற்கு நிலத்தின் தரமே காரணமாயிருந்திருக்கவேண்டும். இதற்கு ஒரே ஒரு உதாரணமே உள்ளது. ஊர் நில அளவு காணிக்கடன் வேலிவிகிதம் ஆண்டான் ஊர் 75% 9மா. 5,850 77 இதிலிருந்து மிகவும் செழிப்பான நிலங்களையே தேவதானமாக அளித்து, வேலிக்கு 100 கலம் காணிக்கடன் வருவாய் வரும்படியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது தெளிவாகிறது. காணிக்கடன் போகவும், ஊர், இறை, பாட்டங்கள் முதலிய சில்லிறைகள் இறுத்த பின்னர், பயிரிடுவோருக்கு வாழ்க்கைச் செலவுக்கு ஊதியம் கிடைக்க வேண்டும். 7.1. இம்மாற்றங்கள் நிகழ்ந்த பின்னர் காணிக்கடன் அதிகமாகி, ஒழுங்காக அளக்க வேண்டிய நிலைமையும் தோன்றிய பின்னர் பயிரிடும் உழவர்களின் வருமானம் குறைந்திருக்கவேண்டும். இறையிலி நிர்ணயிக்கப்பட்டு அதுபோக எஞ்சிய எல்லா நிலங்களுக்கும் காணிக்கடன் இருக்கவேண்டி வந்ததால், ஊர் பொதுவருமானமும் குறைந்திருக்கவேண்டும். 7.2. இவ்வாறு தேவதான நிலங்களின் காணிக்கடன் வருவாயை உயர்த்தியதோடல்லாமல் நில உரிமை மாற்றங்களின் மூலமும் கோயில் வருமானத்தை அதிகரிப்பதற்கு ராஜராஜன் ஏற்பாடுகள் செய்ததைச் சில கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. உரிமை மாற்றங்களைக் குறிப்பிடும் சில கல்வெட்டுகளை ஆராய்ந்து, இம்மாற்றங்களின் தன்மையை அனுமானிப்போம். “தொண்டை நாடான ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஒய்மா நாட்டுப் பேராயூர். முன்னுடையாரை மாற்றிக்குடி நீக்கிக் காராண்மையும் மியாட்சியும் மிகுதிக் குறைமையும் உள்ளடங்க இவ்வூர் இறைகட்டின