பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ශ්‍රේ 頸部。 隘勇醚盤翻疆翻酶。。。。。。。。。。。。。。。。。。。。。。。。。。。 119 ಇಣ நிலைநிறுத்திக்கொள்ள அவர்கள் பயிரிடும் குடிகளிடம் முன்னிலும் அதிகமாக காராட்சி, மீயாட்சிப் பங்குகளை வசூலிக்கத் தொடங்கினர் என்பதை, அவற்றை எதிர்த்து உழுது பயிரிடும் குடிகளது கிளர்ச்சிகள் பற்றிய சாசனச் செய்திகளிலிருந்து நாம் அறிகிறோம். இவை பற்றிய விவரங்களை "கோயில் சாசனங்கள்" பல தருகின்றன. காராட்சியும், மீயாட்சியும் வேலிக்கு இவ்வளவென ராஜராஜனது ஆணைகள் நிச்சயிக்கவில்லை. எனவே அதிகரித்துக் கொள்ள முடியும். அதுபோலவே உழுது பயிரிடும் குடிகளுக்கு வேலிக்கு இவ்வளவென்றோ, கூலித்தொழில் செய்வோரது கூலி இவ்வளவென்றோ நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே சுவாமிக்காக உழைக்கிறோம், நமது பொருளாதாரத் துன்பங்கள் சுவாமிக்காக என்ற பக்தியுணர்வைத் தூண்டுவது எளிதாயிற்று. இம்மாற்றங்களால் ஏற்படும் பளு முழுவதையும் ஏற்றுக்கொண்டு மன அமைதிகொள்ள பக்திப் பிரசாரம் பயன்பட்டது. இவ்வாணைகளின் விளைவுகளை எதிர்த்த உழவர்களை சிவத்துரோகிகள் என்ற பட்டம் கட்டி அவ்வெதிர்ப்புகளை அடக்குவதும், சுவாமிக்கே நிலம் என்ற கொள்கையால் எளிதாயிற்று.