பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

藝郵。磁腳磁經峪鑫。。。。。。。。。 9 粉 * 毫 * 心 莎 * 蜂 @ 曾 $ 吟 曾 必 bo (o se #37 འཛཱ་༑ བྱ་ சிறுமியர் இதைச் செய்தால் நடவு பாழாகிவிடும். மேற்குறித்த கருத்தை விளக்குவதற்கு உருவகப் பொருள் உருவகத் தொழிலிலிருந்து பெறப்படுகிறது. சமூக வாழ்க்கையில் தனியார் சுதந்திரமும், சமூகப் பொறுப்பும் இணைந்து செல்லவேண்டும். இதனை உழைக்கும் மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இக்கருத்தை பல மொழி பேசும் உழைக்கும் மக்கள் பல்வேறு விதமாக தங்களது மொழிகளிலுள்ள பழமொழிகளின் வழியே வெளியிடுகிறார்கள். இக்கருத்தை திரிபுரி மக்களும், தமிழ் மக்களும்,தங்கள் பழமொழிகளில் எவ்வாறுவெளியிட்டுள்ளார்கள் எனக் காண்போம். தனக்காக உண்ண வேண்டும்; பிறருக்காக உடுத்தவேண்டும் என்ற கருத்தை ஒரே விதமாக இரு பழமொழிகளும் வெளியிட்டுள்ளன. திரிபுரி தமிழ் தனக்காக உண்ண வேண்டும். உனக்காகச் சாப்பிடு, பிறர் மதிக்க உடை உடுத்த வேண்டும். பிறருக்காக உடுத்து. ஒருவன் தனக்குப் பிடித்ததை உண்ணலாம். அதற்கு அவனுக்கு சுதந்திரம் உண்டு. ஆனால், கோவணத்தைக் கட்டிக்கொண்டு கோயிலுக்குப் போகமுடியாது. பொது இடங்களில் உடுத்திக் கொள்ளவேண்டிய முறைகள் சமூக வழக்கங்களாகி உள்ளன. இந்த வழக்கங்களை எந்த தனி மனிதனும் கடைப்பிடிக்க வேண்டும். தனி மனிதன் சமூக வழக்கங்களையும் கட்டுப்பாடுகளையும் சமூக வாழ்க்கையின் அமைதிக்காக கடைப்பிடிக்க வேண்டும். நாட்டு மக்கள் (Folks) எல்லோரும் உழைக்கும் மக்கள். உழைப்பே அவர்களுக்கெல்லாம் பொதுவான செல்வம். உழைப்பு பயன்தர வேண்டும், உழைப்பு குழம்பிப் போய்விடக் கூடாது, வீணாகி விடக்கூடாது. உழைக்கும் போது தனிமனிதத் திறமை முழுவதும் பயன்படுத்தப்பட்டு, பயனளிக்க வேண்டும் என்பதெல்லாம் உழைக்கும் மக்களுடைய பொதுவான ஆர்வங்கள். இக்கருத்துக்களோடு, பல பழமொழிகள் தொடர்பு கொண்டிருக்கும். உதாரணமாக 5-வது, 6வது பழமொழிகளை எடுத்துக்கொள்வோம். திறமையான வேலையை பலர் செய்வதால் முழுமையான பயன் விளைந்துவிடாது என்பது இதன் கருத்து. தமிழில் இவை இரண்டும் பழமொழி உவமைகள்.