பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:క్షీః ឆ្អអី សារីប្រយោទថា « » - • • • • • • • • - че в с. е с е 2 শুক্ত ஆனால் ஆணாதிக்க சமுதாயத்திற்கு பல நகர ராஜ்யங்களை இணைக்கிற வலிமைமிக்க ஒரு தேவன் தேவை. எனவே மொரோடாக் ஆயுதங்கள் தரித்தவன். தலைக்கவசம் தரித்தவன். புயல் போன்ற குதிரைகள் கட்டிய தேரில் போருக்குச் செல்லுகிறான். இது வளர்ச்சியடைந்து உலோக உபயோகம், சக்கர உபயோகம், விலங்கு பழக்கல் முதலியவற்றைத் தெரிந்துகொண்ட மக்களின் கற்பனை என்பதில் ஐயமில்லை. தியாமத் மொரோடாக் போரில், மொரோடாக் பயன்படுத்திய வலை, ஈட்டி, கத்தி ஆகியவை, மீன் பிடித்தல், வேட்டையாடுதல், முதலியவற்றில், முன்னேறிய தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்திய மக்களின் சிந்தனையைக் காணலாம். தியாமத் வாயைப் பிளந்ததும், மொரோடாக் காற்றை அவள் வாயினுள் புகும்படி ஆணையிட்டான். காற்றாடிகள் (Wind lass) மூலம் நீரிறைக்கும் தொழில் நுணுக்கம் தெரிந்தவர்கள் காற்றைத் தங்கள் ஆணைக்குட்படுத்தலாம் என்று கருதினர். அதனால்தான் அவர்கள் கற்பனையில் மொரோடாக் காற்றைக் கட்டளையிட முடிந்ததைக் கருத முடிந்தது. தியாமத்தின் உடலிலிருந்து பூமியையும் ஆகாயத்தையும் மொரோடாக் படைத்தான். இதிலிருந்து பூமியும், வானமும் தாயின் உடலிலிருந்து தோன்றியவை என்பது மொரோடாக்கை வணங்கியவர்களது கருத்து என்று தோன்றுகிறது. மொரோடாக் மனிதனைப் படைத்ததாகக் கதை கூறவில்லை. ஆனால் அவனை எல்லாத் தெய்வங்களுக்கும் சக்தியளிக்கும் ஒரே தேவன் என்று ஒரே நாடாகப் பாபிலோனியா இணைந்த பின் கருதிய மக்கள் அவன் மனிதனைப் படைக்க எண்ணினான் என்று கதையை முடித்துவிட்டனர். தேவர்கள் இருந்தால் போதுமா? அவர்களுக்குக் கோவில் கட்டி வணங்க மனிதர்கள் வேண்டாமா? இதனால் தங்களை வணங்க மனிதனைப் படைக்க மொரோட்ாக் எண்ணினான் என்று கதை கூறுகிறது. ஒரு குறிப்பிட்ட சமுதாய நிலைமையில் அதற்கு முன் நிலை பெற்றிருந்த சமுதாயங்களில் தோன்றியிருந்த மக்கள் நம்பிக்கைகளால் படைக்கப்பட்ட தெய்வங்களில் ஒன்றையொன்று கொன்ற பிறகு