பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத 26 . . . . . . . . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் শুক্তি எஞ்சியிருந்த தெய்வம் மனிதனைப் படைக்க எண்ணியதாகத் தங்கள் கற்பனையில் வரலாற்று முற்காலச் சிந்தனைகளைப் பண்டைய பாபிலோனியவர் தலைமாற்றிக் கொண்டார்கள். இதுவே மிகப்பழமையான படைப்புக் கதையின் மானிடவியல் - சமூகவியல் விளக்கமாகும். ஒரு கதையை இவ்வாறு விளக்கிவிட்டால் மற்றக் கதைகளை இவ்வளவு விரிவாக விளக்க வேண்டியதில்லை. அக்கதைகளைக் கூறி அவற்றைப் படைத்தவர்களின் சமுதாய வளர்ச்சி நிலையோடு இணைத்துக் காட்டினால் போதுமானது. எனவே இனிவரும் படைப்புக் கதைகளை சுருக்கமாகவே விளக்குவோம். கிரேக்கப் படைப்புக் கதைகள் கிரேக்கப் புனைகதைகளில் நான்கு வேறுபட்ட படைப்பு 'வரலாறுகள் கூறப்படுகின்றன. அவற்றைக் காண்போம்: 1. ஆதியில் யூரிநோம் என்னும் உலகமாதா குழப்பத்திலிருந்து அம்மணமாக எழுந்தாள்; தனது கால்களைப் பதிக்க இடமில்லாமல் கடலையும், வானையும் பிரித்தாள். கடலின் மீது தனியாகத் தாண்டவமாடினாள். அவள் தெற்கு நோக்கி ஆடிக்கொண்டே போனாள். காற்றுப் புதிதாக எழுந்து அவளைப் பின்பற்றி வீசியது. அவள் காற்றை இரு கைகளாலும் பிடித்துத் தேய்த்தாள். ஒபியான் என்ற பெரும் பாம்பு தோன்றியது. அவள் ஆட ஆட ஒபியான் அவளுடலைச் சுற்றி வளைத்தான். அசைவில் காம உணர்வு கொண்டு அவளைப் புணர்ந்தான். மோரியாஸ் என்ற வடகாற்று அவளைக் கர்ப்பம் கொள்ளச் செய்தது. பெண் குதிரைகள் வடகாற்றடிக்கும்பொழுது தங்கள் உடலின் பின் பாகத்தை அதனை நோக்கித் திருப்ப ஆண்குதிரை புணராமலேயே கருவுறுகின்றன என்று பண்டைக் கிரேக்கர்கள் நம்பினார்கள். பின்னர் அவள் ஒரு புறாவின் உருவெடுத்துப் பிரபஞ்ச முட்டையிட்டாள். அவள் ஆணையை ஏற்று ஒபியான் அதனைச் சுற்றி ஒரு வளையமாகத் தனது உடலை வளைத்துக்கொண்டான். அந்த முட்டையிலிருந்து சூரியன், சந்திரன், கிரகங்கள்,உடுக்கணங்கள், பூமி, பூமியிலுள்ள ஆறுகள், மரங்கள், தாவரங்கள்,உயிரினங்கள் அனைத்தும் வெளிவந்தன.